கத்தரிக்காய் கொத்சு | Brinjal Gotsu in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  6th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Brinjal Gotsu by Neeru Srikanth at BetterButter
கத்தரிக்காய் கொத்சுNeeru Srikanth
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

603

0

கத்தரிக்காய் கொத்சு recipe

கத்தரிக்காய் கொத்சு தேவையான பொருட்கள் ( Ingredients to make Brinjal Gotsu in Tamil )

  • கொத்துமல்லி - கொஞ்சம்
  • பெருங்காயம் - தாராளமான ஒரு சிட்டிகை
  • உப்பு – சுவைக்கு
  • நல்லெண்ணெய் –2 தேக்கரண்டி
  • உளுந்து – ½ தேக்கரண்டி
  • கடலை பருப்பு – ½ தேக்கரண்டி
  • கடுகு – ¼ தேக்கரண்டி
  • தண்ணீர் 500 மிலி
  • இஞ்சி சிறிய துண்டு
  • பச்சை மிளகாய் 4
  • புளி 2 எலுமிச்சை அளவு
  • கத்தரிக்காய் 3

கத்தரிக்காய் கொத்சு செய்வது எப்படி | How to make Brinjal Gotsu in Tamil

  1. கத்தரிக்காயைக் கழுவி எண்ணெயில் தோய்த்துக்கொள்ளவும்.
  2. கத்தரிக்காயை கேஸ் தீயில் வறுத்து எல்லாப்பக்கமும் வேகும் வரையில் திருப்பவும்.
  3. ஆறட்டும்.
  4. தோலை உரித்து கத்தரிக்காயை மசித்துக்கொள்க.
  5. புளியை தண்ணீரில் அடித்து 500 மிலி தண்ணீரில் சாறாகத் தயாரித்துக்கொள்ளவும். இப்போது எல்லா பொருள்களும் சமைப்பதற்குத் தயார்.
  6. ஒரு கடாயினை எடுத்து எண்ணெய், பெருங்காயம் சேர்க்கவும்.
  7. கடுகு, கடலை பருப்பு, உளுந்து சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
  8. இஞ்சி சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  9. பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்க.
  10. அடுப்பை நிறுத்தவும்.
  11. புளிச்சாறைச் சேர்க்கவும்.
  12. வறுத்து மசிக்கப்பட்ட கத்தரிக்காயைச் சேர்க்கவும்.
  13. உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
  14. கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்துக்கொள்ளவும்.

Reviews for Brinjal Gotsu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.