வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் படகு

Photo of Bitter gourd boat by Fathima Beevi at BetterButter
68
1
0.0(0)
0

பாகற்காய் படகு

Oct-17-2018
Fathima Beevi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் படகு செய்முறை பற்றி

பாகற்காய் படகு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய்-2
  2. உப்பு- தேவையான அளவு
  3. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  4. கடலைமாவு- 1 டேபிள் ஸ்பூன்
  5. ஸ்டப்பிங் தேவையான பொருட்கள்:
  6. வேக வைத்த சிறிய உருளைக்கிழங்கு-2
  7. பன்னீர்- 50 கிராம்
  8. வெங்காயம்-1
  9. இஞ்சி பூண்டு விழுது- 1 டீ ஸ்பூன்
  10. மிளகாய் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  12. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  13. கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  14. உப்பு-தேவையான அளவு
  15. எண்ணெய்- 1 டீஸ்பூன்
  16. பெருஞ்சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  17. கருலேப்பில்லை- சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாகற்காய் தோல் சீவி நடுவில் கீரி விதைகளை எடுக்கவும். குறிப்பாக பாகற்காய் இரண்டாக பிரிக்க கூடாது.
  2. விதைகள் நீக்கிய பாகற்காயை நன்றாக கழுவி, பாகற்காயின் எல்லா பக்கமும் உப்பு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. வெங்காயத்தைபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. வேக வைத்த உருளைக்கிழங்கை மதித்து கொள்ளவும்.
  5. பன்னீரை நன்கு துருவிக் கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பெருஞ்சீரகம், வெங்காயம், கருலேப்பில்லை, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் நன்கு பொன்னிறம் ஆனதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. பின்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி, துருவிய பன்னீர் சேர்க்கவும்.
  9. ஸ்டப்பிங் மசாலாவை சிறிது நேரம் குளிர வைக்கவும்.
  10. பாகற்காயை அரை மணி நேரத்திற்கு பின், பாகற்காயில் உள்ள உப்பை  நன்றாக பிழிந்து எடுக்கவும்.
  11. பின்பு பாகற்காயை நன்றாக கழுவி சிறிது நேரம் உலரத்தவும்.
  12. ஒரு தட்டில் சிறிது கடலை மாவு,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
  13. உலர்த்திய பாகற்காயில், தயார் செய்து வைத்துள்ள மசாலா வை பொதித்து வைக்கவும் ,
  14. பின்பு பாகற்காயியை கடலை மாவில் தேய்த்து வைக்கவும்.
  15. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஸ்டப்பிங் செய்த பாகற்காயை எல்லா பக்கமும் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
  16. விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்