வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கறி

Photo of bottle gourd curry by Mymoonah Sayeeda at BetterButter
881
1
5.0(0)
0

சுரைக்காய் கறி

Oct-17-2018
Mymoonah Sayeeda
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கறி செய்முறை பற்றி

சிம்பிள் சுரைக்காய் கறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் பெரியது ஒன்று
  2. பாசிப்பருப்பு ஒரு கையளவு
  3. பெரிய வெங்காயம் 4
  4. பெரிய தக்காளி 2
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. குழம்பு மசாலா தூள் 3 டீஸ்பூன்
  7. தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. எண்ணெய் தேவைக்கு
  10. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல், விதை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கையளவு பாசிப் பருப்பை கழுவி சிறிது (15 நிமிடங்கள்) ஊற வைக்கவும்
  3. வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. அடுப்பில் குக்கரை வைத்து 3 to 6 டேபிள்ஸ்பூன் ஆயில் ஊற்றவும்
  5. ஆயில் சூடாகியதும் கருவேப்பிலை போடவும்
  6. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போடவும்
  7. சிறுது நேரம் நன்கு வதங்க விடவும்
  8. வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் சுரைக்காயை போடவும்
  9. சுரைக்காய் சிறிது வதங்கியதும் குழம்பு மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் போடவும்
  10. இப்போது ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும்
  11. சுரைக்காய், பாசிப்பருப்பு, மசாலா மற்றும் உப்பு அனைத்தும் ஒருசேர பிரட்டவும்
  12. ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்க்கவும் போதவில்லை என்றால் சேர்க்கவும்
  13. மசாலா வாடை போனதும்
  14. கொதி வரும் நிலையில் குக்கரை மூடி 2 விசில் மிதமான தீயில் வைக்கவும்
  15. சேர்வ் பண்ணும் போது சிறிது கஸ்தூரி மேத்தி அல்லது மல்லி இலை சேர்த்தால் நன்றாக இருக்கும்
  16. இது சாதம் மற்றும் சப்பாத்தி பூரி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்
  17. கிரேவி வரன்டிறாத அளவுக்கு தாராளமாக எண்ணெய் ஊற்றி வதக்கினால் சுவை நன்றாக இருக்கும்
  18. தனி மிளகாய் தூள் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அவசியமில்லை உங்களுடைய குழம்பு மசாலா தூள் நல்ல காரமாக இருந்தால் அதுவே போதும்.
  19. காரம் உங்கள் தேவைக்கு சற்று அதிகமாகவோ அல்லது குறைத்தோ சேர்த்து கொள்ளலாம்
  20. தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம் கிரேவி திக்காக இருந்தால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்