வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்குப் பச்சடி

Photo of Senai Kizhangu Pachadi | Elephant Yam Raita by Neeru Srikanth at BetterButter
2512
27
4.0(0)
0

சேனைக்கிழங்குப் பச்சடி

Jul-07-2016
Neeru Srikanth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருணைக்கிழங்கு 250 கிராம்
  2. பச்சை மிளகாய் – ½ நீளமான மிளகாயில் இருந்து
  3. இஞ்சி - 1 மெல்லியத் துண்டு
  4. நறுக்கப்பட்ட கொத்துமல்லி – 3 தேக்கரண்டி
  5. உப்பு – சுவைக்கு
  6. தயிர் – 1 கப்
  7. எண்ணெய் – 1 தேக்கரண்டி
  8. பெருங்காயம் –சிட்டிகை
  9. கடுகு – 1.5 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு – 1.5 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கருணைக்கிழங்கின் தோலை உரித்து நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
  2. கருணைக்கிழங்கை மூழ்கச்செய்யும் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  3. கொத்துமல்லி, மிளகாய், இஞ்சி, கருணைக்கிழங்கு ஆகியவற்றை ஒரு மிக்சியில் சேர்க்கவும். கருணைக்கிழங்கைச் சேர்ப்பதற்கு முன் தண்ணீரை வடிக்கட்டிவிடவும், ஆனால் தண்ணீரை வெளியில் ஊற்றிவிடவேண்டாம். கலவையை அரைத்துக்கொள்க.
  4. தனியாக அலங்கரிக்க ஆரம்பிக்கவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெயை, பெருங்காயம் எடுத்துக்கொள்க. சூடானதும் கடுகைச் சேர்த்து வெடிக்கச்செய்யவும்.
  5. அலங்கரிக்கப்பட்ட கலவையில் உளுத்தம்பருப்பைச் சேர்க்கவும்.
  6. தயிர், கொத்துமல்லி-கருணைக்கிழங்கு கலவையை ஒரு பாத்திரத்தில் கலந்து உப்பு சேர்த்துக்கொள்ளவும். கருணைக்கிழங்கை வேகவைக்கப் பயன்படுத்திய மீதமுள்ளத் தண்ணீரைச் சேர்த்து ஒரு கலக்கு கலக்கிக்கொள்ளவும்.
  7. அலங்கரித்தப் பொருள்களை ரைத்தாவுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்