வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் அப்பளக் கூட்டு

Photo of Yellow Pumpkin Appala Koottu by Jayasakthi Ekambaram at BetterButter
354
0
0.0(0)
0

பரங்கிக்காய் அப்பளக் கூட்டு

Oct-19-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் அப்பளக் கூட்டு செய்முறை பற்றி

அப்பளம் போட்டு செய்யும் பரங்கிக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் 100 கிராம்
  2. பயித்தம் பருப்பு நூறு கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி-2
  5. எண்ணெய் 3ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  9. பூண்டுப்பற்கள் 2
  10. கறிவேப்பிலை ஒரு கொத்து
  11. கல் உப்பு ஒரு ஸ்பூன்
  12. துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
  13. குழம்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  14. பச்சை மிளகாய் ஒன்று
  15. கொத்து மல்லி தழை அரை கைப்பிடி அளவு
  16. பொரித்த அப்பளம் 4

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பூண்டு பற்களை நசுக்கி வைக்கவும்
  3. பரங்கிக்காயை சிறிய சதுரத் துண்டுகளாக கட் செய்யவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை காய வைக்கவும்
  5. வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்
  6. பரங்கிக்காயை போட்டு வதக்கவும்
  7. பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  8. மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  9. பயித்தம் பருப்பை வறுத்து அலசி வைக்கவும்
  10. தண்ணீர் கொதித்ததும் பயித்தம் பருப்பை அதில் சேர்க்கவும்
  11. நன்றாக கொதித்த உடன் சிறிய தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்
  12. காய் நன்றாக வெந்து கெட்டி பதம் வந்த உடன் துருவிய தேங்காயை சேர்க்கவும். அடுப்பை அணைத்து விடவும்.
  13. பொரித்த அப்பளத்தை உடைத்து அதில் சேர்க்கவும்
  14. தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் நசுக்கிய பூண்டு கறிவேப்பிலை சோம்பு தூள் தாளித்து அதில் கொட்டவும்
  15. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்