வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசணிக்காய் போளி

Photo of Yellow pumpkin boli by Krishnasamy Vidya Valli at BetterButter
523
1
0.0(0)
0

மஞ்சள் பூசணிக்காய் போளி

Oct-20-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசணிக்காய் போளி செய்முறை பற்றி

எப்பொழுதும் கடலை பருப்பு அல்லது தேங்காய் வைத்து தான் போளி செய்வோம் வித்தியாசமான இந்த பூசணிக்காய் போளி செய்து பாருங்கள். ஒருவருக்கு ஒன்று வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஞ்சள் பூசணி துருவல் அரை கப்
  2. தேங்காய் துருவல் கால் கப்
  3. வெல்லம் கால் கப்
  4. ஏலப் பொடி 2 சிட்டிகை
  5. நெய் ஒரு தேக்கரண்டி
  6. மேல் மாவிற்கு தேவையானவை
  7. கோதுமை மாவு அல்லது மைதா மாவு அரை கப்
  8. உப்பு ஒரு சிட்டிகை
  9. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  10. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. போளி வாட்டுவதற்கு தேவையான அளவு நெய்

வழிமுறைகள்

  1. மேல் மாவிற்கு கொடுக்கப்பட்டவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்
  2. கடாயில் நெய் விட்டு பூசணிக்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பச்சை வாசனை போனவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்
  4. வெல்லம் சேர்த்து சுருளக் கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும்
  5. சிறிது ஆறிய பின் நான்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  6. மேல் மாவையும் நான்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி மேல் மாவை வைத்து தட்டி கொள்ளவும் அதன் மேல் ஒரு பூரணம் வைத்து மடித்து மறுபடியும் தட்டிக் கொள்ளவும்
  8. தோசைக்கல்லில் நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  9. சூடான சுவையான பூசணிக்காய் போளி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்