வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மசால் வடை

Photo of Bottlegourd Masal Vadai by Sowmya Sundar at BetterButter
419
0
0.0(0)
0

சுரைக்காய் மசால் வடை

Oct-20-2018
Sowmya Sundar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மசால் வடை செய்முறை பற்றி

சுரைக்காய் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து செய்யலாம் சுவையான வடை. சுரைக்காய் உடல் எடையை குறைப்பதற்கும் , கொலஸ்டிராலை கட்டுப்படுத்தவும் உதவும் என்பதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய சுரைக்காய் 1 கப்
  2. கடலை பருப்பு 1 கப்
  3. துவரம்பருப்பு 1/4 கப்
  4. மிளகாய் வற்றல் 3
  5. பச்சை மிளகாய் 2
  6. சீரகம் 1 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  9. எண்ணெய் டீப் ஃப்ரை செய்ய
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. பருப்பு வகைகளை சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.சுரைக்காயை தோல் சீவி துருவி கொள்ளவும்
  2. பருப்பு ஊறிய பின்னர் தண்ணீர் வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் மிளகாய் வற்றல்,சீரகம்,உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த மாவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் துருவிய சுரைக்காய் பிழிந்து சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக தட்டி போட்டு மிதமான தீயில் நன்றாக வேக வைத்து கொள்ளவும்
  5. சுரைக்காய் மசால் வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்