வீடு / சமையல் குறிப்பு / கீரைத்தண்டு சுரைக்காய்  சாம்பார்

Photo of Spinach stem Bottle gourd Brinjal sambar by Fathima Beevi at BetterButter
469
0
0.0(0)
0

கீரைத்தண்டு சுரைக்காய்  சாம்பார்

Oct-20-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரைத்தண்டு சுரைக்காய்  சாம்பார் செய்முறை பற்றி

கீரைத்தண்டு சுரைக்காய்  சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுரைக்காய்- 1/2
  2. தண்டுக்கீரை - 1 கட்டு
  3. முருங்கை காய் -1
  4. பெரிய வெங்காயம்-1
  5. தக்காளி-2
  6. துவரம் பருப்பு- 50 கிராம்
  7. சாம்பார் தூள்-1 டேபிள் ஸ்பூன் (அல்லது மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன் மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன் )
  8. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  10. உப்பு- தேவையான அளவு
  11. புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்
  12. கொத்தமல்லி இலை- தேவைப்பட்டால்
  13. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  14. துருவிய தேங்காய்- 1/4 கப்
  15. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  16. தாளிக்க தேவையான பொருட்கள்:
  17. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  18. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  19. வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
  20. சீரகம் -1/4 டீ ஸ்பூன்
  21. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  22. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  2. சுரைக்காய் தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. தண்டுகீரையின் இலைகளை எடுத்து விட்டு, தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  4. முருங்கைகாய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  5. துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்
  6. ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய சுரைக்காய், கீரைத்தண்டு, முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கிளறவும்.
  7. மேலும் புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  8. பின்பு விசில் அடங்கியதும் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கிளறவும்.
  10. தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.
  11. சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்