கேரளத்து முட்டை ரோஸ்ட் | Kerala Egg Roast in Tamil

எழுதியவர் Jaya Rajesh  |  7th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kerala Egg Roast by Jaya Rajesh at BetterButter
கேரளத்து முட்டை ரோஸ்ட்Jaya Rajesh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

264

0

கேரளத்து முட்டை ரோஸ்ட் recipe

கேரளத்து முட்டை ரோஸ்ட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kerala Egg Roast in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 6 பூண்டு பற்கள் நசுக்கியது
  • 2 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 4 வேகவைத்தக் கடின முட்டைகள்

கேரளத்து முட்டை ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Kerala Egg Roast in Tamil

  1. ஒரு கடாயில் தோங்காய் எண்ணெயைச் சூடுபடுத்திப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை அதை வதக்கிக்கொள்ளவும்.
  2. அதன்பின்ன பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அது மிருதுவாகி எண்ணெய் கசியுமவரை வதக்கவும்.
  3. அடுத்து மசாலாப் பொடிகளையும் சேர்வைப்பொருள் பட்டியலில் குறிப்பிட்டபடி உப்பையும் சேர்க்கவும்.
  4. மசாலாவின் பச்சைவாடை போகும்வரை மீண்டும் வதக்கவும். சிறிது தண்ணீரைச் சேர்த்து கடாயை மூடி வேகவைக்கவும்.
  5. சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி சமைக்கவும். மசாலா வெந்ததும் மேலே எண்ணெய் மிதப்பதை நீங்கள் பார்க்கலாம்.
  6. இந்த நிலையில் வேகவைத்த கடின முட்டையைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாக பூசவும். ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  7. பரந்தா அல்லது ஆப்பத்தோடுச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Kerala Egg Roast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.