வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் ஊறுகாய்

Photo of Bitterguard pickle by Umamaheswari Chellamuthu at BetterButter
465
0
0.0(0)
0

பாவக்காய் ஊறுகாய்

Oct-21-2018
Umamaheswari Chellamuthu
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

பாவக்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை.ஆனால் ,பாவக்காயின் கசப்பு தன்மை உடம்பிற்கு பல்வேறு வகையில் பயனுள்ள அருமருந்து .இந்த பாவக்காய் ஊறுகாய் செய்வதும் மிக சுலபம் .தவிர ,நாள் பட கசப்பு என்பதே சிறிதும் இருக்காது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பாவக்காய் -2
  2. நல்லெண்ணெய் -100 கிராம்
  3. மிளகாய் தூள் -காரத்திற்கு ஏற்ப
  4. வெந்தைய பவுடர் -2 டீ ஸ்பூன்
  5. பெருங்காய பவுடர் -1 டீ ஸ்பூன்
  6. கடுகு -1 ஸ்பூன்
  7. கல் உப்பு -சுவைக்கேற்ப.
  8. வினிகர் -150 ml

வழிமுறைகள்

  1. பாவக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
  2. ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு ,அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும் .கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
  3. மறுநாள் ,ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் கடுகை போட்டு பொரிய விடவும் .
  4. அடுப்பை சிம்-இல் வைத்து அதில் பெருங்காய தூள் ,வெந்தைய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும். மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாவக்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
  5. பாவக்காய் ஒரு அளவு வதங்கியதும் ,அதில் வினிகரை ஊற்றவும்.
  6. அடுப்பை சிம்-இல் வைத்து வினிகர் வற்றும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  7. வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும். நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் ,அடுப்பில் இருந்து இறக்கி ,ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  8. இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோக படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்