வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் புலாவ்

Photo of Ridgegourd Pulao by Sowmya Sundar at BetterButter
215
1
0.0(0)
0

பீர்க்கங்காய் புலாவ்

Oct-22-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் புலாவ் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் ,கொத்தமல்லி சேர்த்து செய்த வித்யாசமான புலாவ் இது. காய் சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் துண்டுகள் 1 கப்
  2. சீரகசம்பா/ பாஸ்மதி அரிசி 1 கப்
  3. தண்ணீர் ஒன்றரை கப்
  4. பெரிய வெங்காயம் 1 நறுக்கியது
  5. தக்காளி 1 நறுக்கியது
  6. குடைமிளகாய் 1 நறுக்கியது
  7. உப்பு தேவையான அளவு
  8. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  9. எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  10. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  11. சீரகம் 1 டீஸ்பூன்
  12. பட்டை , கிராம்பு , ஏலக்காய் தலா 2
  13. விழுதாக அரைக்க
  14. இஞ்சி 1 துண்டு
  15. பூண்டு 4 பல்
  16. பச்சை மிளகாய் 2
  17. கொத்தமல்லி தழை 1 கைப்பிடி
  18. கசகசா 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை லேசாக தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் நெய்,எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம்,பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்த பின் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்
  4. சிறிது வதங்கியதும் அரைத்த மசாலா விழுது, தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வதங்கியதும் பீர்க்கங்காய், சர்க்கரை சேர்த்து லேசாக வதக்கவும்
  6. பின் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வரை வேக வைத்து கொள்ளவும். பீர்க்கங்காய் புலாவ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்