வீடு / சமையல் குறிப்பு / நீர் காய்களின் விருந்து

Photo of Watery vegetables virunthu by Abinaya bala at BetterButter
1527
1
0.0(0)
0

நீர் காய்களின் விருந்து

Oct-22-2018
Abinaya bala
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நீர் காய்களின் விருந்து செய்முறை பற்றி

பாகற்காய் புடலங்காய் மஞ்சள் மற்றும் வெள்ளை பூசணிக்காய் சுரைக்காய் பீர்க்கங்காய் கொண்டு செய்யப்பட்ட சிறு விருந்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலை பீர்க்கங்காய் பஜ்ஜி செய்ய
  2. கடலை மாவு ஒரு கப்
  3. மிளகாய்த்தூள் பெருங்காயம் சோம்பு உப்பு சிறிதளவு
  4. பொரிப்பதற்கு எண்ணெய்
  5. பூசணிக்காய் கூட்டு செய்ய
  6. பூசணிக்காய் ஒரு கப்
  7. கடலைப்பருப்பு அரை கப்
  8. அரைப்பதற்கு தேங்காய் வெள்ளைப் பூண்டு சீரகம் கடுகு வரமிளகாய்
  9. தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை
  10. தடியங்காய் தயிர் பச்சடி செய்ய
  11. தடியங்காய் ஒரு கப்
  12. அரைப்பதற்கு தேங்காய் மிளகு சீரகம் பச்சை மிளகாய்
  13. தயிர் அரை கப்
  14. தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை
  15. பாகற்காய் வறுவல் செய்ய
  16. பஜ்ஜி மாவுடன் அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  17. நிலக்கடலை பொடி ஒரு டீஸ்பூன்
  18. பொரிப்பதற்கு எண்ணெய்
  19. பீர்க்கங்காய் தொக்கு செய்ய
  20. பீர்க்கங்காய் அரை கப்
  21. வெங்காயம் தக்காளி தலா 1
  22. இஞ்சி சிறுதுண்டு பூண்டு 10 பல்
  23. புளி சிறு துண்டு
  24. பச்சை மிளகாய் ஒன்று
  25. தாளிக்க கடுகு கறிவேப்பிலை
  26. புடலங்காய் கூட்டு செய்ய
  27. புடலங்காய் 1கப்
  28. கடலைப்பருப்பு அரை கப்
  29. வெங்காயம் ஒன்று
  30. அரைப்பதற்கு தேங்காய் வெள்ளை பூண்டு சீரகம் மஞ்சள்தூள் மற்றும் வரமிளகாய்
  31. தாளிக்க கடுகு கருவேப்பிலை
  32. பீர்க்கங்காய் தோல் துவையல் செய்ய
  33. பீர்க்கங்காய் தோல் 1கப்
  34. தேங்காய் ஒரு கப்
  35. பெருங்காயம் இஞ்சி மிளகு சிறிதளவு
  36. வர மிளகாய் ஐந்து
  37. உளுந்து 2 டீஸ்பூன்
  38. தாளிக்க கடுகு கறிவேப்பிலை
  39. புடலை மசாலா ரிங்கஸ் செய்ய:
  40. புடலங்காய் 4 வட்டத்துண்டு
  41. தக்காளி வெங்காயம் மிளகாய் தலா 1
  42. இஞ்சி பூண்டு சிறிதளவு
  43. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சிறிதளவு
  44. சுரைக்காய் சூப் செய்ய:
  45. சுரைக்காய் 2 கப்
  46. உப்பு மிளகுத்தூள் சிறிதளவு
  47. சுரைக்காய் மசாலா கறி செய்ய
  48. சுரைக்காய் ஒரு கப்
  49. தக்காளி வெங்காயம் தலா 1
  50. மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தலா ஒரு டீஸ்பூன்
  51. மஞ்சள் தூள் சிறிதளவு
  52. தாளிக்க கடுகு சீரகம் கடலைப்பருப்பு கறிவேப்பிலை
  53. கதம்ப சாம்பார் செய்ய
  54. சிறுபருப்பு துவரம்பருப்பு கடலைப்பருப்பு தலா கால் கப்
  55. வெங்காயம் தக்காளி மிளகாய் தலா 1
  56. துவரை அரை கப்
  57. சுரைக்காய் பீர்க்கங்காய் மஞ்சள் பூசணி தடியங்காய் ஒரு கப்
  58. புடலை சிறிதளவு
  59. முருங்கக்காய் பாதி
  60. கேரட் பீன்ஸ்
  61. கத்தரிக்காய் 1
  62. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  63. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  64. சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
  65. புளி சிறிதளவு
  66. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  67. பெருங்காயம்
  68. தாளிக்க கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வர மிளகாய்
  69. பாகல் மருந்து குழம்பு செய்ய
  70. பாகற்காய் அரை கப்
  71. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  72. மருந்து பொடி செய்ய தேவையான பொருட்கள்
  73. கடுகு ஓமம் சீரகம் தலா ஒரு டீஸ்பூன்
  74. விரலி மஞ்சள் 1
  75. பெருங்காயம் சிறிதளவு
  76. வெள்ளைப் பூண்டு 10 பல்
  77. சுக்கு சிறு துண்டு
  78. இவற்றை நன்கு வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்

வழிமுறைகள்

  1. சுரைக்காய் ,பீர்க்கங்காய், பீர்க்கங்காய் தோல், வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  2. புடலங்காய் ,பாகற்காய், வெங்காயம் ,தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக வெட்டி வைக்கவும் .புடலங்காயை வட்ட வடிவில் வெட்டவும்
  3. புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் பஜ்ஜி செய்ய : கடலை மாவு மிளகாய்த்தூள் பெருங்காயம் சோம்பு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து புடலங்காய் மற்றும் பீர்க்கங்காயை அதில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  4. எண்ணையில் பொரித்து நன்கு சிவக்க எடுத்தால் சுவையான புடலங்காய் பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி
  5. பூசணிக்காய் கூட்டு செய்ய: பூசணிக்காய் கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் சீரகம் வரமிளகாய் கடுகு பூடு அரைத்த விழுது ஆகியவற்றை குக்கரில் சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும்
  6. தாளித்து இறக்கினால் சுவையான பூசணிக்காய் கூட்டு ரெடி
  7. புடலை கடலை கூட்டு: அதே செய்முறையில் புடலங்காய் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து செய்தால் புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு ரெடி
  8. பாகற்காய் வறுவல் : பஜ்ஜி மாவில் சிறிதளவு அரிசி மாவு மற்றும் நிலக்கடலை மாவு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பாகற்காய் வறுவல் ரெடி
  9. தடியங்காய் தயிர் பச்சடி: வெட்டிய தடியங்காய் நீரில் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
  10. பின் மிக்ஸியில் தேங்காய் சீரகம் மிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
  11. நீர் வற்றும் வரை வேக வைத்து தாளித்து தயிர் கலந்தால் சுவையான தடியங்காய் தயிர் பச்சடி ரெடி
  12. சிம்பிள் சுரைக்காய் சூப் : வெட்டிய சுரைக்காயை குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  13. வேகவைத்த சுரைக்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதனுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்தால் சுவையான சுரைக்காய் சூப் ரெடி
  14. பீர்க்கங்காய் தோல் துவையல்: வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதனுடன் பெருங்காயம் இரண்டு ஸ்பூன் உளுந்து மற்றும் 5 வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  15. ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கவும் பின் அதனுடன் தேங்காய் இஞ்சி மிளகு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுக்கவும்
  16. ஆறிய உடன் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து மையாக எடுத்துக்கொள்ளவும் சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி
  17. பாகற்காய் மருந்து குழம்பு செய்ய: வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி பாகற்காயை நன்கு வதக்கி நீர் ஊற்றி கொதிக்க விடவும்
  18. பின்னர் வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்த பொடியை அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் காரம் அதிகமாக இருந்தால் சிறிது தேங்காய் எண்ணெயை அதனுடன் ஊற்றவும்
  19. மிகவும் ஆரோக்கியமான பாகற்காய் மருந்து குழம்பு ரெடி இது பிள்ளைப் பேற்றின் போது செய்யும் குழம்பு
  20. புடலை மசாலா ரிங்க்ஸ்: வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து பின் அதனை வாணலியில் எண்ணெயை ஊற்றி அதனை நன்கு வதக்கி சிறிது நீர் ஊற்றி வேக வைத்து வட்டமாக வெட்டி வைத்த புடவையை சேர்த்து வேக விடவும்
  21. புடலங்காய் நன்கு வெந்து அந்த மசாலாக்கள் புடலங்காயின் நடுவில் சென்று சேரும் வரை அதனை நன்கு வேக வைத்தால் சுவையான புடலை மசாலா ரிங்க்ஸ் ரெடி
  22. பீர்க்கங்காய் தொக்கு: தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சிறிதளவு புளி பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி பீர்க்கங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து தாளித்து எடுத்தால் சுவையான பீர்க்கங்காய் தொக்கு ரெடி
  23. சுரைக்காய் ரசம் செய்ய: நாம் சாதாரணமாக செய்யும் ரசம் செய்வது போலவே செய்து நீருக்கு பதிலாக சுரைக்காய் ஜூஸ் சேர்த்து செய்தால் சுரைக்காய் ரசம் ரெடி
  24. கதம்ப சாம்பார் செய்ய: துவரம்பருப்பு சிறு பருப்பு கடலைப்பருப்பு மற்றும் வெட்டி வைத்த காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் மல்லித் தூள் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை உப்புடன் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  25. என்ன தாளித்து இறக்கினால் சுவையான கதம்ப சாம்பார் ரெடி
  26. சுரைக்காய் மசாலா கறி: வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி மற்றும் சுரைக்காய் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  27. பின்னர் அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  28. நீர் வற்றும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான சுரைக்காய் மசாலா கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்