Photo of Thali Meals by Sumaiya shafi at BetterButter
595
0
0.0(0)
0

மீல்ஸ்

Oct-22-2018
Sumaiya shafi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீல்ஸ் செய்முறை பற்றி

மீல்ஸ்( பாகற்காய், சுரைக்காய் ,புடலங்காய் ,பீர்க்கங்காய்,பூசணிக்காய்)

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் பருப்பு செய்வதற்கு
  2. சுரைக்காய் 1 சிறியது
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  5. கடுகு-சிறிதளவு
  6. கருவேப்பிலை-1
  7. சீரகம்-சிறிதளவு
  8. பச்சை மிளகாய்-2
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. சிறு பருப்பு -1/4 கப்
  11. சிவப்பு மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  13. சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. பீர்க்கங்காய் மோர் குழம்பு செய்வதற்கு
  16. பீர்க்கங்காய்-1 சிறியது
  17. தயிர்- ஒரு கப்
  18. தேங்காய்-1/4கப்
  19. சின்ன வெங்காயம்-3
  20. கடுகு-தாளிக்க
  21. சீரகம்-1/2 டீஸ்பூன்
  22. பச்சை மிளகாய்-2
  23. கருவேப்பிலை-1
  24. உளுத்தம் பருப்பு-2டீஸ்பூன்
  25. கடலை பருப்பு-2டீஸ்பூன்
  26. காய்ந்த மிளகாய்-2
  27. பாகற்காய் புலி குழம்பு செய்வதற்கு
  28. பாகற்காய்-1
  29. பூண்டு-5
  30. கருவேப்பிலை-1
  31. கடுகு, வெந்தயம், சீரகம்-தாளிக்க
  32. சின்ன வெங்காயம்-10
  33. சிவப்பு மிளகாய் தூள்-2டீஸ்பூன்
  34. மஞ்சள்தூள்-1டீஸ்பூன்
  35. பச்சை மிளகாய்-2
  36. தேங்காய்-1/4கப்துருவியது
  37. எண்ணெய்
  38. பொறியல் செய்வதற்கு
  39. இறால்-8
  40. பாகற்காய் கால் கிலோ
  41. கடுகு சீரகம் தாளிக்க
  42. சின்ன வெங்காயம் 10
  43. கருவேப்பிலை சிறிதளவு
  44. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  45. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  46. உப்பு தேவையான அளவு
  47. தேங்காய் துருவல் கால் கப்
  48. மஞ்சள் பூசணிக்கா அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  49. மஞ்சள் பூசணிக்காய் கால் கிலோ
  50. சர்க்கரை-தேவையான அளவு
  51. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  52. முந்திரி-10 துண்டு
  53. பால் 1/4 கப்
  54. நெய் தேவையான அளவு
  55. கேசரி கலர் பொடி சிறிதளவு
  56. ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வதற்கு தேவையான பொருள்
  57. மைதா ஒரு கப்
  58. உப்பு சிறிதளவு
  59. எண்ணெய்
  60. புடலங்காய் 1 சிறியது
  61. உருளைக்கிழங்கு 1 சிறியது
  62. சிவப்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  63. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  64. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  65. மல்லி இலை பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை, சீரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் சுரைக்காயை சேர்க்கவும்.
  3. பின் அதில் ஊற வைத்த சிறு பருப்பை ,சிவப்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரக தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி 4 whistle வரும் வரை போடவும்.
  4. சுவையான சுரைக்காய் பருப்பு தயார்
  5. பீர்க்கங்காய் மோர் குழம்பு செய்வதற்கு
  6. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் பீர்க்கங்காயை சேர்க்கவும்
  7. தேங்காய்,சின்ன வெங்காயம் ,ஊற வைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய்,சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து மை போல அரைக்க வேண்டும்
  8. அரைத்த விழுதை கொதித்த பீர்க்கங்காயுடன் சேர்க்க வேண்டும்.சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
  9. பின்பு இதை சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
  10. கொதித்த உடன் அதை இறக்கி வைத்துவிட்டு. தயிரை நன்கு அடித்து கொள்ளவும்.
  11. நன்கு ஆறிய பிறகு அடித்து வைத்த தயிர் சேர்க்க வேண்டும்.
  12. கடைசியாக தாளித்து அதில் ஊற்ற வேண்டும்
  13. பாகற்காய் புளி குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்களை
  14. முதலில் வட்டமாக வெட்டிய பாகற்காயை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  15. பின் வேறொரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் ,வெந்தயம் ,கருவேப்பிலை,பூண்டு சேர்க்கவும்.
  16. பின்பு அதில் சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  17. தேங்காய் பூண்டு, மிளகு பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  18. அரைத்த கலவையை புளியுடன் சேர்த்து எண்ணெயில் ஊற்றவும்
  19. நன்கு கொதித்த பின் பொரித்து வைத்த பாகற்காயை சேர்க்கவும்
  20. இரால் பாகற்காய் பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
  21. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
  22. பின் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
  23. வெங்காயம் வதங்கியதும் பாகற்காய் இறால் போட்டு வதக்க வேண்டும்.
  24. பின் அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.1/4கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  25. குக்கரை மூடி 3 விசில் போட வேண்டும்.
  26. கடைசியாக தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்
  27. கசப்பு இல்லாத இரால் பாகற்காய் பொரியல் தயார்
  28. மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  29. ஒரு கனத்த பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  30. பின் அதில் துருவிய மஞ்சள் பூசணிக்காயை வதக்கவும்
  31. கால் கப் பால் ஊற்றி மூடி போட்டு வேக விட வேண்டும்
  32. நன்கு வெந்த பிறகு சிறிது நெய், சர்க்கரை, கலர் பொடி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  33. கடைசியில் நெய் விட்டதும் முந்திரி போட்டு இறக்கவும்
  34. புடலங்காய் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வதற்கு.
  35. முதலில் கோதுமை மாவை உப்பு சிறிது எண்ணெய் ,தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  36. பின் புடலங்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
  37. அதைப் பிசைந்து சிறிது சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு, மிளகாய் தூள் ,மல்லி இலை போட்டு கிளறி கொள்ளவும்.
  38. மாவை திரட்டி இந்த கலவையை அதில் வைத்து தட்டி கொள்ளவும்.
  39. தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்