வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் உருண்டை குழம்பு

Photo of bottle gourd kofta curry by Mymoonah Sayeeda at BetterButter
1314
1
0.0(0)
0

சுரைக்காய் உருண்டை குழம்பு

Oct-23-2018
Mymoonah Sayeeda
52 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
67 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் உருண்டை குழம்பு செய்முறை பற்றி

Bottle gourd

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய சுரைக்காய் அரை கிலோ அளவு 1
  2. கடலைமாவு 5 டேபிள்ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 1tsp
  4. கருவேப்பிலை சிறிது
  5. உப்பு தேவைக்கு
  6. தனி வற்றல் தூள் ஒரு டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. பெரிய வெங்காயம் ஒன்று + 1/2
  9. பெரிய தக்காளி மூன்று
  10. பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
  11. குழம்பு மிளகாய்த்தூள் 2 to 4 டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள் சிறிது
  13. கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  14. சோம்பு ஒரு டீஸ்பூன்
  15. சீரகம் ஒரு டீஸ்பூன்
  16. எண்ணை பொரிக்க மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு
  17. கஸ்தூரி மேத்தி சிறிதளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் விதை நீக்கி கிரேடரில் (grater)துருவிக் கொள்ளவும்
  2. துருவிய சுரைக்காயில் நீரை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்(can use this water for gravy)
  3. அரை வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு பச்சை மிளகாயையும் நறுக்கி அதனுடன் உப்பு தனி வற்றல் தூள் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன் கடலை மாவு 5 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கருவேப்பிலை துருவிய சுரைக்காயையும் சேர்த்து பிசைந்து உருண்டை பிடிக்கவும். (நீர் சிறிதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்) இதை மிதமாக எண்ணெயில் இட்டு பொறித்து எடுக்கவும்.
  4. உருண்டை சரியாக வரவில்லை எனில் கவலை வேண்டாம் எப்படி வந்தாலும் ஈரம் இல்லாமல் இருந்தால் பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்
  5. தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்
  6. வெங்காயத்தையும் பொட்டுக்கடலையும் சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும் (Can use cashews instead of pottukadalai)
  7. இப்போது சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் சோம்பு போட்டு பொரிய விடவும்.
  8. அடுப்பை சிம்மில் வைத்து மீதமுள்ள மசாலாக்களை போட்டு வதக்கவும் நன்கு நிறம் கிடைக்கும்(கருகாமல் கவனமாக வதக்கவும் )
  9. பின் அரைத்த வெங்காயம் பேஸ்ட் தக்காளி பேஸ்ட் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  10. உப்பு சேர்த்து நன்கு மசாலாக்களின் வாடை போகும் வரை வதக்கவும்
  11. இப்பொழுது தனியாக எடுத்து வைத்த சுரைக்காய் நீரை ஊற்றி வேண்டுமெனில் இன்னும் அதிகமாக தண்ணீர் ஊற்றவும்
  12. உப்பு காரம் சரி பார்த்து போதவில்லை எனில் சேர்த்துக் கொள்ளவும்..(சேர்த்தால் மீண்டும் சிறிது கொதிக்கவிடவும்)
  13. கிரேவி நன்கு கொதித்ததும் பொரித்து வைத்த உருண்டைகளை போட்டு ஒரு கிளறு கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும் *உருண்டைகள் உடையாது அளவிற்கு கிளறவும்
  14. இறுதியில் கஸ்தூரி மேத்தி சிறிது சேர்த்து அலங்கரிக்கவும்
  15. இப்போது சுவையான சுரைக்காய் உருண்டை குழம்பு தயார்
  16. இது ரசம் சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்
  17. பேஸ்ட்களை அரைத்து மற்றும் உருண்டையை பொறித்து வைத்துக் கொண்டால் வேலை ஈசி
  18. சற்று நீண்ட ரெசிப்பி ஆயினும் முயற்சி பயனளிக்கும்.
  19. *உருண்டைகளை இட்டு பிரட்டி விடும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும். சமைத்த பின்னர் கிரேவி கெட்டி ஆகும்.
  20. நான் இங்கு இந்த ரெசிபியை செய்யும் அதிகப்படியான நேரத்தை கொடுத்திருக்கிறேன் மிகவும் விரைவில் செய்து விடலாம்.
  21. healthy food kitchen யூடியூப் சேனலுக்கு நன்றி.அதைப் பார்த்து தான் நான் இந்த ரெசிபியை சிறு மாற்றத்துடன் செய்தேன் நன்றாக இருந்தது. அவர்களுடைய யூடியூப் சேனல் இந்த ரெசிபி உள்ளது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்