வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் லட்டு கறி

Photo of Parangikkaay Lattu Kari by Radha Balu at BetterButter
321
0
0.0(0)
0

பரங்கிக்காய் லட்டு கறி

Oct-23-2018
Radha Balu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் லட்டு கறி செய்முறை பற்றி

பரங்கிக்காயில் செய்யும் இனிப்பான ஒருவகை கறி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரங்கிக்காய் - அரை கிலோ
  2. துருவிய தேங்காய் - 3/4 கப்
  3. வெல்லம் - 25 கிராம்
  4. உப்பு - 1/8 டீஸ்பூன்
  5. தாளிக்க
  6. கடுகு - ஒரு டீஸ்பூன்
  7. உடைத்த உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  8. மிந்திரிப் பருப்பு - 6
  9. மிளகாய் வற்றல் -2
  10. எண்ணை - ஒரு டீஸ்பூன்
  11. நெய் - ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி முழுகும் அளவு தண்ணீரில் குழையாமல் வேக விட்டு, வடிகட்டவும்.
  2. ஒரு வாணலியில் நெய் எண்ணெய் சேர்த்து சுட வைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, மிந்திரி பருப்பு சேர்க்கவும்.
  3. பருப்புகள் சிவந்ததும், மிளகாய் வற்றலைக் கிள்ளி வதக்கி அதனுடன் வெந்த பரங்கிக்காயை போட்டு மேலே வெல்லம் சேர்த்து கிளறவும்.
  4. வெல்லம் சேர்ந்து கெட்டியானதும் தேங்காய் சேர்த்து கிளறவும்.
  5. பரங்கிக் காயில் இனிப்பு இருப்பதால் அதிக வெல்லம் சேர்க்க கூடாது.
  6. இது இனிப்பாக இருப்பதால் இதற்கு லட்டு கறி என்று பெயர்.
  7. இது வற்றல் குழம்பு, காரக்குழம்பு சாதத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்