வீடு / சமையல் குறிப்பு / பொடி அடைத்த பீர்க்கங்காய் குழம்பு

Photo of Stuffed Ridgegourd Kuzhambu by Sowmya Sundar at BetterButter
315
1
0.0(0)
0

பொடி அடைத்த பீர்க்கங்காய் குழம்பு

Oct-23-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொடி அடைத்த பீர்க்கங்காய் குழம்பு செய்முறை பற்றி

பீர்க்கங்காயில் புதிதாக வறுத்து அரைத்த பொடி அடைத்து அதை கொண்டு செய்யும் புதிய வகை குழம்பு இது. இதை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சௌத்இந்தியன்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் 1 பெரியது
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 1
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. பொடி அரைக்க :
  11. கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  12. கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் 3
  14. சீரகம் 1 டீஸ்பூன்
  15. வறுத்த வேர்க்கடலை 1 டீஸ்பூன்
  16. குழம்பு மசாலா அரைக்க:
  17. துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  18. பச்சரிசி 1 ஸ்பூன்
  19. எள் 1 டீஸ்பூன்
  20. மிளகாய் வற்றல் 5

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் பொடி அடைக்க தேவையான பொருட்கள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
  2. பீர்க்கங்காயை மிக லேசாக தோல் சீவி சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் நடுவில் முழுவதுமாக நறுக்காமல் கத்தியால் நான்காக கீரி கொள்ளவும்.
  3. பொடியை பீர்க்கங்காயினுள் மெதுவாக உடையாமல் அடைக்கவும் .மீதி பொடியை பிறகு குழம்பில் சேர்த்து கொள்ளலாம் .
  4. ஒரு அகலமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் ,தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. சிறிது வதங்கியதும் பீர்க்கங்காயை சேர்த்து வதக்கவும்.அதனுடன் புளிகரைசல் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்
  6. இதனிடையே குழம்பு மசாலாவிற்கு தேவையான பொருட்களை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  7. அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  8. புளி கொதித்து பீர்க்கங்காய் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா மற்றும் மீதி பொடி இருந்தால் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கவும்
  9. பொடி அடைத்த பீர்க்கங்காய் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்