வீடு / சமையல் குறிப்பு / வறுத்த இனிப்பு அரிசி புட்டு | துவையல் | தெவையம் கொங்குநாட்டு ஸ்பெஷல்

Photo of Fried Sweet Rice Puttu | Thevaiyal | Thevaiyam Kongunadu Special by Sangeetha Priya R at BetterButter
1748
4
4.0(0)
0

வறுத்த இனிப்பு அரிசி புட்டு | துவையல் | தெவையம் கொங்குநாட்டு ஸ்பெஷல்

Jul-08-2016
Sangeetha Priya R
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி - 1 1/4 கப்
  2. சர்க்கரை - 1/2 கப் அல்லது அதிகமாக
  3. ஏலக்காய் - 1 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி அல்லது அதிகமாக
  5. எண்ணெய் (1/2 கப் + 2 தேக்கரண்டி) அல்லது அதிகமாக

வழிமுறைகள்

  1. அரிசியை குறைந்தது 4 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அல்லது ஊறும்வரை ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டி முடிந்தவரைக் குறைவானத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சாந்தாக அரைத்து, அவ்வப்போது 1/2 தேக்கரண்டி தண்ணீர் தெளிக்கவும்.
  2. குழவியைப் பயன்படுத்தினால், பதம் அடர்த்தியாக இருக்கும். மிக்சி/கிரைண்டரைக்கூட அரைப்பதற்குப் பயன்படுத்தலாம், ஒரே விஷயம் மாவு அடர்த்தியாக மிருதுவான பதத்தில் இருக்கவேண்டும். நான் மிக்சியைப் பயன்படுத்தினேன், அதனால் சற்றே அதிகமாகத் தண்ணீர் பயன்படுத்தினேன்.
  3. முதலில் அகலமானத் திறந்த கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் தடவி (சௌகரியத்திற்காக நான் ஸ்டிக் கடாயை நீங்கள் பயன்படுத்தலாம்) 1/4 கப் + முதலில் 2 தேக்கரண்டி எண்ணெய். அரைத்த அரிசி மாவைச் சேர்த்துத் தொடர்ந்து கலக்கிக்கொள்ளவும்.
  4. ஈரப்பதம் கொஞ்சம் போனதும், வழக்கமாக கலக்குதலைத் தவிர்த்த பிரிக்க ஆரம்பிக்கவும். தீயை குறைவாக/சிம்மில் இருந்து மிதமான வெப்பம் வரை வைத்துக்கொள்ளவும், அதற்கு மேல் வேண்டாம். மென்மையாக பெரிய கட்டிகளைப் பெற்றதும், மத்தைக் கொண்டு பிரிக்கவும்.
  5. அடியில் ஒட்டிக்கொள்வதாக உணர்ந்தால் ஒரு சமயத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். முத்து போன்ற பதத்திற்கு வரும்வரை பிரித்துக்கொள்ளவும். சர்க்கரை, தேங்காயத் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து தொடர்ந்து கலக்கவும்.
  6. சுத்தமான வெள்ளை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறத்துவங்கும். அடுப்பிலிருந்து எடுத்து சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.
  7. அல்லது காற்றுப் புகாத பாத்திரத்தில் பின்னர் பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைத்துக்கொள்ளவும். அதே நாளில் அல்லது பிரிஜ்ஜில் வைத்து அடுத்தநாள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்