வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் உப்மா

Photo of Coconut Upma by Gouthami Yuvarajan at BetterButter
2921
5
4.5(0)
0

தேங்காய் உப்மா

Jul-08-2016
Gouthami Yuvarajan
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி 1 கப்
  2. தேங்காய் 1/2 கப்
  3. சிவப்பு மிளகாய் 5
  4. மல்லி 1/2 தேக்கரண்டி
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. வெல்லம் 1/2 தேக்கரண்டி
  7. எண்ணெய் 3 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. கடுகு 1 தேக்கரண்டி
  10. சிவப்பு மிளகாய் 2

வழிமுறைகள்

  1. பச்சரிசியைச் சுத்தப்படுத்திக் கழுவிக்கொள்ளவும். போதுமானத் தண்ணீர் விட்டு 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. 1 மணி நேரத்திற்குப் பிறகு, அரிசி, தேங்காய் பத்தைகள், சிவப்பு மிளகாய், மல்லி, உப்பு ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இந்த சாந்தோடு, புளிக் கரைசல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கட்டி சேராமல் நன்றாகக் கலக்கவும். கலவையை தண்ணீர் பதத்தில் செய்துகொள்ளவும் ( ரவா தோசை மாவின் பதத்திற்கு)
  4. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகையும் சிவப்பு மிளகாயையும் தாளித்துக்கொள்ளவும்.
  5. தீயை குறைத்துவிட்டு அரைத்தக் கலவையை மெதுவாகச் சேர்க்கவும்.
  6. அடிக்கடி கிண்டி மீதமுள்ள எண்ணெயை இப்போது சேர்க்கவும். கலவை ஒன்றாகத் திரண்டு திடமாக மாறத் துவங்கும்.
  7. ஒட்டுமொத்தமும் வெளிர் பொன்னிறத்திற்கு மாறி சுவையாக இருந்தால், அடுப்பை நிறுத்தவும்.
  8. பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்