வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ்

Photo of Ridge gourd fried rice by Rachell Revathi Samuel at BetterButter
211
1
0.0(0)
0

பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ்

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் சேர்த்து செய்யப்படும் ஃபிரைட் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பீர்க்கங்காய் 1
  2. சோளமாவு 1/4 கப்
  3. அரிசி மாவு 4 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய் பொரிக்க
  9. தாளிக்க: எண்ணெய் 3 ஸ்பூன்
  10. வெங்காயம் 1
  11. கருவேப்பிலை சிறிது
  12. முட்டை 1
  13. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  14. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  15. கரம் மசாலா 1 ஸ்பூன்
  16. சாதம் 2 கப்
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு மைதா மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
  2. தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  3. பீர்க்கங்காயை தோல் நீக்கி விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் போடவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவில் முக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. பொரித்த பீர்க்கங்காய் துண்டுகள்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  9. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  10. வெங்காயம் வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றவும்.
  11. மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  12. முட்டை நன்றாக வேகும் வரை கிளறவும்.
  13. முட்டை வெந்ததும் பொரித்த வைத்த பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  14. சாதம் சேர்த்து கிளறவும்.
  15. தேவையான அளவு உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
  16. சுவையான பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்