வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் ஸ்பைசி மசாலா

Photo of Pumpkin spicy masala by Rachell Revathi Samuel at BetterButter
318
1
0.0(0)
0

பரங்கிக்காய் ஸ்பைசி மசாலா

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் ஸ்பைசி மசாலா செய்முறை பற்றி

மஞ்சள் பூசணிக்காய் வைத்து செய்யப்படும் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  6. தக்காளி 1
  7. மிளகாய்த்தூள் 1 1/2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  10. மஞ்சள் பூசணி 1 கீற்று
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  6. மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
  7. தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  8. தோல் நீக்கி நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து வேக விடவும்.
  9. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். காய் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  10. பூசணிக்காய் ஸ்பைசி மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்