வீடு / சமையல் குறிப்பு / மேக் அண்ட் சீ்ஸ் கோஃப்டா சேர்த்த வறுத்த பூண்டு பூசணிக்காய் சாஸ்

Photo of Mac and cheese kofta in burnt garlic sweet pumpkin sauce by Pinky Srini at BetterButter
0
1
0(0)
0

மேக் அண்ட் சீ்ஸ் கோஃப்டா சேர்த்த வறுத்த பூண்டு பூசணிக்காய் சாஸ்

Oct-23-2018
Pinky Srini
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மேக் அண்ட் சீ்ஸ் கோஃப்டா சேர்த்த வறுத்த பூண்டு பூசணிக்காய் சாஸ் செய்முறை பற்றி

நாம் எப்பொழுதும் உண்ணும் பூசணிக்காய் வகைகளில் இருந்து சற்றே வித்தியாசமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் செய்யப்படும் உணவு இந்த "பம்ப்க்கீன் சாஸ்" . பொதுவாக நூடுல்ஸ் அல்லது பாஸ்டா உடன் கலந்து உண்பார்கள்!! நான் சற்று நமது நாவின் சுவைக்கு ஏற்ப செய்து உள்ளேன்!!

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • కలయిక
 • ఉడికించాలి
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం
 • తక్కువ పిండి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. மேக் அண்ட் சிஸ் :
 2. ரொட்டி தூள் (bread crumbs) 1/2கப்
 3. உப்பு தேவையான அளவு
 4. எண்ணெய் 1/2tsp + பொறிக்க
 5. மைதா மாவு 1 1/2 tsp + 1tsp
 6. மிளகு பவுடர் 1/4tsp
 7. இத்தாலி சீசனின் 1tsp
 8. சிஸ் துருவி 1/4கப்
 9. பாஸ்டா 3/4கப்
 10. பூசணிக்காய் சாஸ் :
 11. மஞ்சள் பூசணிக்காய் 1 1/2கப் ( நன்கு பழுத்த)
 12. வெண்ணை 2tsp
 13. பூண்டு பொடியாக அரிந்து 2tsp
 14. மிளகாய் தூள் 1/2tsp
 15. சர்க்கரை 1 tsp
 16. தண்ணீர் 1கப்
 17. வெங்காயம் 2tsp
 18. கிரீம் 1tbsp

வழிமுறைகள்

 1. ஒரு வாணலியில் 1கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் வெங்காயம் மற்றும் நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து கொதிக்க விடவும்
 2. அதனுடன் சிறிது உப்பு மற்றும் 1/2tsp சர்க்கரை சேர்த்து வெங்காயத்தின் பச்சை வாடை தெளிந்து பூசணிக்காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்
 3. பின் அவற்றை வடிக்கட்டி ஆறவைத்து அரைத்து கொள்ளவும்
 4. மையாக அரைத்து வடிகட்டியில் வடித்து எடுக்கவும் ( டிப் : இவ்வாறாக எந்த கிரவி வடித்து எடுத்தாலும் கிரீம் போன்று மென்மையாக இருக்கும்)
 5. இன்னொரு அடுப்பில் தண்ணீர் கொதிக்கவைத்து அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பாஸ்டா வை வேகவைத்து எடுக்கவும்
 6. அவற்றை 1/2நிமிடம் குளிர்ந்த நீரில் அலசி எடுத்து வைத்து கொள்ளவும்
 7. இதனுடன் துருவிய சீஸை மற்றும் உப்பு மிளகு தூள் இத்தாலி சீசனின் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
 8. பாஸ்டா பிசுபிசு இருந்தால் கூடுதலாக எதுவும் சேர்கவேண்டி இருக்காது
 9. நன்றாக சேர்ந்து கொள்ளும். இல்லையேல் சிறிது ( 1tsp ) சூடான பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 10. கையில் எண்ணெய் தடவி லட்டு போல் உருண்டையாக பிடித்து கொள்ளவும்
 11. ஒரு கப்பில் மைதா மற்றும் தண்ணீர் ( 1/4கப்) சேர்த்து மெலிதாக குழைத்து கொள்ளவும்
 12. ரொட்டி தூள் ஒரு தட்டில் வைத்து பரப்பி கொள்ளவும்
 13. பிடித்து வைத்த கோஃப்டா உருண்டைகளை முதலில் மைதாவில் முக்கி பின் ரொட்டி தூளில் புரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்
 14. இவ்வாறாக அனைத்து உருண்டைகளை தயார் செய்து வைக்கவும்
 15. இப்பொழுது கடாயில் வெண்ணை சேர்த்து அதனுடன் பொடித்த பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
 16. இப்பொழுது அதில் அரைத்த பூசணிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
 17. சுமார் 10நிமிடம் கழித்து நன்கு பூண்டு மற்றும் பூசணிக்காய் மணம் வரும்
 18. அதில் மிளகாய் தூள், உப்பு, மீதமுள்ள சர்க்கரை சேர்த்து 1நிமிடம் வதக்கவும்
 19. பின் அடுப்பை நிறுத்தி கிரீம் சேர்க்கவும்
 20. இவை செய்யும் பொழுதே மற்றொரு அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் மிதமான சூட்டில் கோஃப்டா பொரித்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
 21. அவற்றை பூசணிக்காய் சாசுடன் சேர்த்து நூடுல்ஸ் அல்லது பாஸ்டாவின் மேல் ஊற்றி ருசிக்கவும்
 22. இதில் காரம் கம்மியகவும் இனிப்பு சற்று கூடுதலாகவும் ருசிப்பர். ஆனால் அவரவர் விருப்பம் ஏற்ப மாற்றி கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்