வீடு / சமையல் குறிப்பு / சிந்தி மோர் குழம்பு

Photo of Sindhi Kadhi by Rina Khanchandani at BetterButter
1894
140
4.8(0)
0

சிந்தி மோர் குழம்பு

Aug-25-2015
Rina Khanchandani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சிந்தி
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 8 தேக்கரண்டி கடலை மாவு
  2. 8 தேக்கரண்டி எண்ணெய்
  3. 1 முருங்கைக்காய்
  4. காலிபிளவர் - 200 கிராம்
  5. உருளைக்கிழங்கு - 2 நடுத்தர அளவு
  6. வெண்டைக்காய் - 8 துண்டுகள்
  7. கொத்தவரை - 8
  8. 1/2 தேக்கரண்டி சீரகம்
  9. கடுகு 1/2 தேக்கரண்டி
  10. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. 2 தேக்கரண்டி புளி

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான நான் ஸ்டிக் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. கடலை மாவை பொன்னிறமாக மாறும் வரை வறுத்து அதன்பின்னர் சிவப்பு மிளகாய், கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து மெதுவாக 2 கப் தண்ணீரைச் சேர்க்கவும்.
  2. மருங்கைக்காயை 1 1/2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்க. அதே கடாயில் சேர்க்கவும். வேகட்டும்.
  3. உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வேகவைத்து, காலிபிளவர், கொத்தவரையை கடாயில் சேர்த்து மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  4. இன்னொரு 1 1/2 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலந்துகொள்க. அகலமான தனி நான் ஸ்டிக் பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி வெண்டைக்காய், கொத்தவரை விதைகளைச் சேர்த்து வதக்கவும். இதை கடலை மாவு-காய்கறி கலவையில் சேர்க்கவும்.
  5. காய்கறிகள் வெந்ததும், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதன்பின்னர் புளி கரைசல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவிபறக்கும் சாதத்தோடுச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்