Photo of Avial by Fathima Beevi at BetterButter
340
0
0.0(0)
0

அவியல்

Oct-23-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

அவியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கைகாய் -1
  2. கோவைக்காய்- 10
  3. புடலங்காய்- 1/2
  4. காரட்-1
  5. பீன்ஸ்-5
  6. சேப்பங்கிழங்கு- 3
  7. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. பெருங் காயத்தூள்-ஒரு சிட்டிகை
  9. உப்பு- தேவையான அளவு
  10. தயிர்- 1/4 கப்
  11. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  12. துருவிய தேங்காய்- 1/4 கப்
  13. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  14. பச்சை மிளகாய்-2
  15. சின்ன வெங்காயம்-1
  16. தாளிக்க தேவையான பொருட்கள்:
  17. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  18. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  19. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  20. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  21. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  22. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவியலுக்கு தேவையான காய்கறிகளை ஒரு இன்ச் அளவில் இருக்குமாறு வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, நறுக்கிய காய்கறிகள், உப்பு, பெருங் காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேக விடவும்.
  3. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், சிறிய வெங்காயம்  சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்
  4. காய்கள் நன்கு வெந்ததவுடன், அரைத்த விழுது சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கி தயிர் சேர்த்து கலக்கி  இறக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் வற்றல், கருலேப்பில்லை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கி அவியலுடன் சேர்த்து கிளறவும்.
  6. சூடான சாதம் மற்றும் அடையுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்