வீடு / சமையல் குறிப்பு / தவா பன்னீர் பீர்க்கங்காய் டிக்கா

Photo of Tawa paneer peerkagai tikka by sowmya shriram at BetterButter
302
1
0.0(0)
0

தவா பன்னீர் பீர்க்கங்காய் டிக்கா

Oct-23-2018
sowmya shriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தவா பன்னீர் பீர்க்கங்காய் டிக்கா செய்முறை பற்றி

குழந்தைகள் பீர்க்கங்காய் விரும்பி சாப்பிடமாட்டார்கள் ,குழந்தைகளுக்கு பன்னீர் பிடிக்கும் . இப்படி பன்னீர் உடன் பீர்க்கங்காய் சேர்த்து கொடுத்தால் அவர்கள் விரும்பிசாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் – 100g
  2. பீர்க்கங்காய் – ½ கப்
  3. கடலை மாவு – ¼ கப்
  4. சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு
  7. மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
  8. கரமசாலா தூள் -½ டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  10. தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
  11. பிரட் தூள் - ¼ கப்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை ரௌண்டாக கட் செய்து கடலை மாவு , சோள மாவு, மிளகாய்தூள், கரமசாலா தூள் , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டிக்கொள்ளவும்.
  2. சிறிது எண்ணெய் சேர்த்து பீர்க்கங்காயை தவாவில் பான் பிரை செய்யவும்.
  3. பன்னீரை கட் செய்து அதில் தயிர் ,சோள மாவு, மிளகாய்தூள், கரமசாலா தூள் , மஞ்சள்தூள், உப்பு கலந்து பிரட் தூளில் போட்டு பிரட்டவும் .
  4. சிறிது எண்ணெய் சேர்த்து பன்னீரை தவாவில் பான் பிரை செய்யவும்.
  5. டூத் பிக் ஸ்டிக்கில் பன்னீர், பீர்க்கங்காயை சேர்த்து பரிமாறினால் அருமையான தவா பன்னீர் பீர்க்கங்காய் டிக்கா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்