Photo of Mini lunch by Rachell Revathi Samuel at BetterButter
711
1
0.0(0)
0

மினி லன்ச்

Oct-23-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மினி லன்ச் செய்முறை பற்றி

மினி லன்ச்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுரைக்காய் பிரியாணி: எண்ணெய் 2 ஸ்பூன்
  2. பட்டை 1
  3. கிராம்பு 2
  4. ஏலக்காய் 1
  5. அன்னாசி பூ 1
  6. பிரியாணி இலை 1
  7. சோம்பு 1/2 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. கருவேப்பிலை சிறிது
  10. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  11. தக்காளி 1
  12. சுரைக்காய் சிறியது 1
  13. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  14. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  15. கரம் மசாலா 1 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. அரிசி 1/2 கப்
  18. பீர்க்கங்காய் முட்டை பொரியல்: எண்ணெய் 1 ஸ்பூன்
  19. கடுகு 1/2 ஸ்பூன்
  20. வெங்காயம் 1
  21. கருவேப்பிலை சிறிது
  22. சிறிய பீர்க்கங்காய் 1
  23. முட்டை 1
  24. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  25. உப்பு தேவையான அளவு
  26. பூசணி மசாலா: எண்ணெய் 1 ஸ்பூன்
  27. கடுகு 1/4 ஸ்பூன்
  28. வெங்காயம் 1
  29. கருவேப்பிலை சிறிது
  30. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  31. தக்காளி 1
  32. மிளகாய்த்தூள் 1 1/2 ஸ்பூன்
  33. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  34. கரம் மசாலா 1 ஸ்பூன்
  35. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  36. மஞ்சள் பூசணி 1 கீற்று
  37. உப்பு தேவையான அளவு
  38. சுரைக்காய் மஞ்சூரியன்: சுரைக்காய் 1
  39. சோளமாவு 3 ஸ்பூன்
  40. மைதா 1 ஸ்பூன்
  41. எண்ணெய் பொரிக்க
  42. தாளிக்க.எண்ணெய் 1 ஸ்பூன்
  43. வெங்காயம் 1
  44. பச்சை மிளகாய் 1
  45. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  46. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  47. சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  48. தக்காளி சாஸ் 2 ஸ்பூன்
  49. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காய் பிரியாணி: அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தோல் நீக்கி நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
  6. தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரிசியை சேர்க்கவும்.. குக்கரை மூடி 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கவும்.
  7. சுவையான சுரைக்காய் பிரியாணி.
  8. 2.பீர்க்கங்காய் முட்டை பொரியல்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் வதங்கியதும் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  10. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  11. காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  12. முட்டை நன்றாக வேகும் வரை கிளறவும்.பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார்.
  13. 3.சுரைக்காய் மஞ்சூரியன்: சுரைக்காயை துருவி அதில் உள்ள தண்ணீரை பிழிந்து தனியே எடுத்து கொள்ளவும்.
  14. சுரைக்காயில் உப்பு மைதா சோளமாவு சேர்க்கவும்.
  15. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.
  16. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுரைக்காயை சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
  17. சுரைக்காய் உருண்டைகள்.
  18. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இ
  19. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  20. பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  21. சோயா சாஸ் சேர்க்கவும்.
  22. சில்லி சாஸ் சேர்க்கவும்.
  23. தக்காளி சாஸ் சேர்க்கவும்.
  24. அனைத்தையும் நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  25. பொரித்த சுரைக்காய் உருண்டைகள் சேர்த்து கிளறவும்.
  26. சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  27. சுரைக்காய் மஞ்சூரியன் தயார்.
  28. 4.பரங்கிகாய் ஸ்பைசி மசாலா: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  29. வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  30. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  31. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  32. தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  33. தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
  34. தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காய் சேர்த்து கொள்ளவும்.
  35. காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  36. பரங்கிக்காய் ஸ்பைசி மசாலா தயார்.
  37. மினி லன்ச் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்