கப்சா ரைஸ் | kapsa rice in Tamil

எழுதியவர் shadiqah hasana  |  24th Oct 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of kapsa rice by shadiqah hasana at BetterButter
கப்சா ரைஸ்shadiqah hasana
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2

1

கப்சா ரைஸ் recipe

கப்சா ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make kapsa rice in Tamil )

 • பாஸ்மதி 3 டம்ளர்
 • நார் வெஜிடபிள் ஸ்டாக் 2 க்யூப்
 • நெய் 50 கிராம்
 • வெங்காயம் 2
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
 • தயிர் 1 டேபிள்ஸ்பூன்
 • பச்சை மிளகாய் 2
 • மல்லி புதினா கருவேப்பிலை சிறிது
 • பட்டை லவங்கம் கிராம்பு தலா 4
 • பிரிஞ்சி இலை 2
 • முந்திரி 10
 • குங்கும்ப்பூ 1 பிஞ்ச்

கப்சா ரைஸ் செய்வது எப்படி | How to make kapsa rice in Tamil

 1. அரிசியை சுமார் அரை மணி நேரம் ஊற விடவும்
 2. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி இரண்டாக பிரித்துக்கொள்ளவும்
 3. வாணலியை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் கருவேப்பிலை தாளிக்கவும்
 4. வெங்காயம் சேர்த்து வதக்கி வெஜிடபிள்் ஸடாக் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
 5. பச்சை வாசணை போனதும் மல்லி புதினா நறுக்கிய மிளகாய் சேர்க்கவும்
 6. 41/2 டம்ளர் நீர் சேர்த்து கொதித்ததும் ஊறிய அரிசியை சேர்க்கவும்
 7. வெஜிடபிள் ஸ்டாகில் உப்பு இருப்பதால் தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்
 8. அவ்வப்பொழுது கிளறி விட்டு சமைக்கவும் தண்ணீர்வற்றியதும் சிம்மில் சிறுதுநேரம் தம்மில் போடவேண்டும்
 9. மீதமுள்ள 25 கிராம் வெண்ணையில் முந்திரியை பொரிக்கவும்.அதே சட்டியில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறத்தில் வறுக்கவும்
 10. குங்கும்ப்பூவை தண்ணீரில் கரைத்து சமைத்த சாத்த்தின் மேல் தெளித்து வறுத்த முந்திரி வெங்காயத்தை தூவி வெஜ் நான்வெஜ் குருமாவுடன் பறிமாறவும்
 11. பண்டிகை நேரத்தில் இது போல் சாதம் செய்து அசத்தலாம்.

எனது டிப்:

பாஸ்மதிக்கு பதில் சீரகசம்பாவிலும சமைக்கலாம்

Reviews for kapsa rice in tamil (1)

shadiqah hasanaa year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.