வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை நொக்கல்

Photo of Sugar Nokkal / Sugar Coated Sev by Menaga Sathia at BetterButter
677
1
0.0(0)
0

சர்க்கரை நொக்கல்

Oct-24-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை நொக்கல் செய்முறை பற்றி

நொக்கல் என்பது சேவ் செய்து சர்க்கரை பாகில் போட்டு எடுப்பது.திருமண பந்தியில் இதனை முக்கியமாக வைப்பாங்க.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலைமாவு -1 கப்
  2. அரிமாவு -1/8 கப்
  3. சோடா உப்பு -1 சிட்டிகை
  4. வெண்ணெய் -2 டீஸ்பூன்
  5. உப்பு -1 சிட்டிகை
  6. எண்ணெய் - பொரிக்க
  7. சர்க்கரை-1+ 1/2 கப்
  8. நீர் -1/4 கப்
  9. பால்-1/8 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு,வெண்ணெய், சோடா உப்பு சேர்த்து கலந்த பின் நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  2. சேவ் அச்சு அல்லது தேன்குழல் அச்சியில் மாவினை சிறிது எடுத்து போடவும்.
  3. பின் எண்ணெய் காயவைத்து பிழியவும்.ஒரு லேயர் மட்டும் பிழியவும்.
  4. பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை கரைந்த பின் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வடிகட்டவும்.u
  6. பின் மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.பாகினை ஒரு விரல்களுக்கு இடையே தொட்டால் 2 நூலிழை போல வரும்.
  7. அல்லது ஒரு சிறு கிண்ணத்தில் நீர் வைத்து பாகினை ஊற்றினால் கரையாது.அதனை பந்து போல திரட்டமுடியும்.ஆனால் கையால் எடுக்க முடியாது.இதுவே 2கம்பிபதம்.
  8. 2கம்பி பதம் வந்ததும் அடுப்பினை அணைத்து பொரித்த சேவ் சேர்த்து கலக்கவும்.
  9. நன்றாக கலக்கி கொண்டே இருந்தால் பாகு சேவ்வில் ஒட்டி பூத்தாற்போல இருக்கும்.
  10. நன்றாக ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்