தம் பிரியாணி | Dum Biriyani in Tamil

எழுதியவர் shadiqah hasana  |  25th Oct 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dum Biriyani by shadiqah hasana at BetterButter
தம் பிரியாணிshadiqah hasana
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  61

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

2

0

தம் பிரியாணி recipe

தம் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Dum Biriyani in Tamil )

 • தரமான பாஸ்மதி அரிசி 5 கிலோ
 • மட்டன் 6 1/4 கிலோ
 • வெங்காயம் 4 கிலோ
 • நாட்டுத்தக்காளி 2 கிலோ
 • பச்சை மிளகாய் 80-100 எண்ணிக்கை
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் 3/4 கிலோ
 • தயிர் 1/2 லிட்டர்
 • மல்லி 3 கட்டு
 • புதினா 2 கட்டு
 • ரீபெண்டு ஆயில் 500 கிராம்
 • நெய் 500 கிராம்
 • மிளகாய்த்தூள் 5 தேக்கரண்டி
 • தனியா தூள் 5 தேக்கரண்டி
 • சீரகத்தூள் 3 தேக்கரண்டி
 • மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
 • பட்டை 20 கிராம்
 • ஏலம் 30
 • கிராம்பு 25
 • ஆரஞ்ச் புட் கலர் 1/4 டீஸ்பூன்
 • குங்கும்ப்பூ 1 டீஸ்பூன்

தம் பிரியாணி செய்வது எப்படி | How to make Dum Biriyani in Tamil

 1. வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக நறுக்கவும்.சுலபமாக நறுக்குவதென்றால் பாதியாக கட் செய்து சிப்ஸ் கட்டரினால் சீவினால் ஈசியாக இருக்கும்
 2. fffg
 3. தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சை மிளகாயை காம்பு நீக்கவும்.புதினா மல்லியை ஆய்ந்து வைக்கவும்.
 4. அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணைய் விடவும்.எண்ணெய் சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலம் சேர்க்கவும்.
 5. பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்
 6. பத்து நிமிடம் ஹை ப்ளேமில் வைத்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்
 7. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பச்சை வாசணை நீங்கியதும் பச்சை மிளகாயை சேர்க்கவும் போதுமான உப்பு சேரக்கவும்
 8. பச்சை மிளகாய் நிறம் மாறியதும் நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்
 9. அனைத்து மசாலா பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்
 10. அடுப்பு சிம்மில் இருக்கவேண்டும் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொண்டிருக்க வேண்டும்
 11. இப்பொழுது நெய் முழுவதையும் விட்டு தொக்கு பதம் வரும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும்
 12. எண்ணைய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.வேலை சுலபமாக இருக்க இந்தக்கலவையை ஆற விட்டு ப்ரிட்ஜில் முதல் நாளே வைத்து விடலாம்
 13. மட்டனை சுத்தம் செய்து அத்துடன் தயிர் உப்பு சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து பிசிறி குக்கரில் இரண்டு விசில் வேக வைக்கவும்
 14. இரண்டு விசிலுக்கு அரை வேக்காடு வெந்திருக்கும் மட்டனில் இருந்து பிரிந்த தண்ணீர் வற்றும் வரை மீண்டும் விசில் இல்லாமல் வேக வைத்து ஏற்கனவே செய்த கலவையில் கலந்து விடவும்
 15. பெரிய எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் இருந்தால் ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் நீர் வீதம் உப்பு சேர்த்து வேக விடவும்
 16. அல்லது பெரிய பாத்திரத்தில் போட்டு வேக வைத்து வடிக்கலாம்.சிரம்ம் இல்லாமல் இருக்க ஐந்து கிலோ அரிசியையும் இரண்டு அல்லது மூன்று தடவையாக வடித்தால் சுலபமாக இருக்கும்
 17. சாதம் தயார் ஆனதும் வாயகன்ற பாத்திரத்தில் சாத்த்தைய சிறிதளவு பரத்தி அதற்கு மேல் கிரேவியை பரப்ப வேண்டும் இதே முறையில் லேயர் லேயராக கிரேவி சாதம் மாற்றி மாற்றி போட்டு கரண்டியால் அழுத்தி விட்டு (விரும்பினால்)1/4 டம்ளர் நீர் அல்லது பன்னீரில் கேசரி பவுடர் கலந்து தூவி விட்டு பாத்திரத்தை மூடி மூடியின் மீது கனமான பொருளை வைத்து அரை மணி நேரம் தம்மில் போட வேண்டும்
 18. சுவையான சூப்பரான பிரியாணி தயார்

எனது டிப்:

சாதம் வடிக்கும் பொழுது 90% வெந்திருந்தால் போதும் .தம்மில் இருக்கும் பொழுதுமீதி பத்து % வெந்துவிடும்.பெரிய எலெக்ட்ரிக் குக்கர் இருந்தாலும் அதில் தம் போடலாம்.சுலபமாக இருக்கும்.இதனை சுமார் 40-50 நபர்கள் சாப்பிடலாம்.

Reviews for Dum Biriyani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.