வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை லட்டு

Photo of PAAN LADOO by Kalai Rajesh at BetterButter
540
4
0.0(0)
0

வெற்றிலை லட்டு

Oct-25-2018
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை லட்டு செய்முறை பற்றி

வழக்கமான லைட்டுவை விட இது முற்றிலும் மாறுபட்டது , இந்த லட்டை நீங்களும் இந்த பண்டிகை காலத்தில் முயற்சி செய்து பாருங்கள், பாராட்டு நிச்சயம் உண்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 7 அல்ல 8 பிஞ்சு வெற்றிலை
  2. டெசிகேடட் அல்லது துருவிய தேங்காய் - 200 கிராம் + (சில மேசைகரண்டி லடூகளை உருட்டுவதற்கு )
  3. கண்டன்ஸ்டு மில்க் 300 கிராம்
  4. சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி+ 1 சிட்டிகை
  5. ஏலக்காய் பொடி - 1/4 தேகரண்டி + 1 சிட்டிகை
  6. ரோஸ் எசன்ஸ் - 3/4 தேக்கரண்டி
  7. பால் - 3 மேசைக்கரண்டி
  8. நெய் - 3/4 தேக்கரண்டி
  9. குல்கந்து - 1 மேசைக்கரண்டி + 1 தேகரண்டி
  10. எந்த பொருளையும் பிரிட்ஜில் இருந்து நேரடியாக எடுத்து உபயோகிக்க வேண்டாம் அதுவும் ரூம் டெம்பரேச்சருக்கு கொண்டு வந்த பிறகு உபயோகிக்கவும்

வழிமுறைகள்

  1. கண்டென்ஸ்ட் மில்க் , பால் வெற்றிலை இவை மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்
  2. ஒரு கனமான பாத்திரத்தில் நெய் சேர்கவும்
  3. நெய் சூடானவுடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்
  4. நிறம் மாறாமல் பருகவும்
  5. சரியான பதத்தில் வறுத்தவுடன், அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கிளறவும்
  6. குறைந்த தீயில் 3 நிமிடம் கிளறிவிடவும்
  7. கலவை நல்ல நைசாக சேர்ந்து வரும்
  8. இப்போது மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்
  9. சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  10. இப்போது கலவை தயார் இதனை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்
  11. கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே ஒரு மேசைக் கரண்டியை வைத்து , ஒரே மாதிரியான உருண்டைகளை உருட்டவும்.
  12. உருட்டிய உருண்டைகளை தனியே வறுத்து வைத்துள்ள தேங்காய் பூவில் பிரட்டி உருட்டி எடுக்கவும்
  13. உருட்டிய உருண்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஒரு தட்டில் அடுக்கவும்
  14. ஒரு அரை மணி நேரம் கழித்து காற்று புகாத டப்பாவில் லடூகளை வைக்கவும்.
  15. அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்
  16. வெளியே வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாது
  17. பிரிட்ஜில் வைத்தால் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்
  18. உருண்டை பிடிக்க வரவில்லை என்றால் சிறிது தனியே வறுத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து பின் உருட்டலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்