வீடு / சமையல் குறிப்பு / பால் பவுடர் பர்பி

Photo of Milk powder Barbi by sudha rani at BetterButter
661
1
0.0(0)
0

பால் பவுடர் பர்பி

Oct-26-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பால் பவுடர் பர்பி செய்முறை பற்றி

தீபாவளி ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால் பவுடர் 1 கப்
  2. சர்க்கரை 1_1/2 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. கோக்கோ பவுடர் 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு வைக்கவும்
  2. பின் பால் பவுடரை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து தொடர்ந்து கிளறவும்
  3. சற்று சேர்ந்தாற் போல் வரும் போது நெய் தடவிய தட்டில் பாதியைக் கொட்டி சமப்படுத்தவும்
  4. பின் வேகமாக கோக்கோ பவுடரை மீதி பால் பவுடர் கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. அதை இந்த ட்ரேயில் சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  6. இதை நான் செய்தது போல் மேல் பால் பவுடர் கலவை கீழே கோக்கோ கலவை இப்படி செய்யலாம் அல்லது டபுள் லேயர் ஆக செய்யலாம்
  7. கண்டிப்பாக மிகவும் கெட்டியாக கிளற வேண்டாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்