அன்னாசி கேசரி | Pineapple Kesari in Tamil

எழுதியவர் Subashini Murali  |  10th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Pineapple Kesari by Subashini Murali at BetterButter
அன்னாசி கேசரிSubashini Murali
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

308

0

அன்னாசி கேசரி recipe

அன்னாசி கேசரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Pineapple Kesari in Tamil )

  • உணவு நிறமி ஒரு சிட்டிகை - எலுமிச்சை மஞ்சள்
  • பொடியாக நறுக்கப்பட்ட பாதாம் அலங்கரிப்பதற்காக
  • 1 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  • 10 முந்திரி பருப்பு
  • 3 கப் தண்ணீர்
  • 3/4 - 1 கப் வெளுக்கப்பட்ட வெண்ணெய்/நெய்
  • 1 கப் அன்னசி நறுக்கப்பட்டது
  • 2 கப் சர்க்கரை
  • 1 கப ரவை

அன்னாசி கேசரி செய்வது எப்படி | How to make Pineapple Kesari in Tamil

  1. ஒரு தேக்கரண்டி வெளுக்கப்பட்ட வெண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில் மீதமுள்ள வெளுக்கப்பட்ட வெண்ணையைச் சேர்த்து ரவையை 3-5 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்துக்கொள்ளவும்.
  3. நறுக்கப்பட்ட அக்காசியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
  4. இதற்கிடையில் 3 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும் (கொஞ்சம் உணவு நிறமி, ஏலக்காயுடன்).
  5. கொதிக்கும் தண்ணீரை வறுத்த ரவையில் ஊற்றி மிதமானச் சூட்டில் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  6. ரவை வெந்து அடர்த்தியானதும் சர்க்கரை சேர்த்து கட்டி சேராமல் தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  7. முதலில் தண்ணீராக இருக்கும் பிறகு வெந்ததும அடர்த்தியாகிவிடும்.
  8. நெய் கசிய ஆரம்பித்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்.
  9. வறுத்த முந்திரி பருப்பு நறுக்கப்பட்ட பாதாம் பருப்புகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
  10. நெய் தடவியத் தட்டில் பரவச் செய்து துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம்.

Reviews for Pineapple Kesari in tamil (0)