சுறா மீன் கட்லெட் | Shark Fish Cutlet in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  10th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Shark Fish Cutlet by Menaga Sathia at BetterButter
சுறா மீன் கட்லெட்Menaga Sathia
  • ஆயத்த நேரம்

    25

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

23

0

சுறா மீன் கட்லெட் recipe

சுறா மீன் கட்லெட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Shark Fish Cutlet in Tamil )

  • சுறா மீன் - 1/2 கிலோ
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி + 3/4 தேக்கரண்டி
  • வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரிய அளவு (தோலுரித்து மசிக்கப்பட்டது)
  • வெங்காயம் - 1 பொடியாக நறுக்கப்பட்டது
  • பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கப்பட்டது
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • கொத்துமல்லி - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகத் தூள் - 3/4 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • முட்டை - 2
  • பிரெட் தூள் - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு + 1 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கு

சுறா மீன் கட்லெட் செய்வது எப்படி | How to make Shark Fish Cutlet in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். சுத்தப்படுத்தப்பட்டுக் கழுவப்பட்ட மீன் துண்டுகளைப் போடவும். மூடியால் மூடி 5 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
  2. சூடாக இருக்கும்போதே தோலை உரித்து எலும்புகளை நீக்கவும். கட்டிகள் ஏதுமில்லாமல் மீனை உங்கள் கைகளால் மசித்துக்கொள்ளவும்.
  3. 1 தேக்கரண்டி எண்ணெயை வானலியில் சூடுபடுத்தி இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் சிறு தீயில் வறுக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
  4. இப்போது மசித்த உருளைக்கிழங்கு, மசித்த மீன், உப்பு, 3/4 தேக்கரண்டி மஞ்கள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து ஈரப்பதம் போகும்வரை வறுக்கவும். முட்டையை உப்புடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
  5. மீன் கலவை ஆறியதும் எலுமிச்சை பந்து அளவு உருண்டை பிடித்து தட்டி 1/4 இன்ச் மொத்தத்தில் செய்துகொள்ளவும்.
  6. தட்டையான உருண்டைகளை அடித்த முட்டையில் முக்கி பிறகு பிரட் தூளில் பிரட்டிக்கொள்ளவும். எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி அவற்றின் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை பொரித்துக்கொள்ளவும்.

எனது டிப்:

மாலை நேரத்துச் சிற்றுண்டியாக தக்காளி சாஸ் அல்லது சாதத்திற்கு பக்க உணவாகவும் பரிமாறலாம். சுறாவுக்குப் பதிலாக வஞ்சரம் மீன், கானாங்கெளுத்தி அல்லது கேனில் அடைக்கப்பட்ட துனா மீன் அல்லது சங்கரா மீனைப் பயன்படுத்தலாம்.

Reviews for Shark Fish Cutlet in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.