Photo of peppar sev by shadiqah hasana at BetterButter
351
0
0.0(0)
0

மிளகு சேவு

Oct-27-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மிளகு சேவு செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடியது.இதனை பட்டாணி மாவில் தயாரிப்பதால் கூடுதலான சுவை கிடைக்கும்.அழகான நிறமும் கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பட்டாணி பருப்பு 1/2 கிலோ
  2. அரிசி மாவு 100 கிராம்
  3. ஓமம் 1/2 டீஸ்பூன்
  4. மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
  5. உப்பு சுவைக்கு
  6. ரிஃபைண்டு ஆயில் 1/2 லிட்டர்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை விட சற்று பெரிய அளவில் மளிகை கடைகளில் கிடைக்கும் பட்டாணி பருப்பை வாங்கி வெயிலில் காய வைத்து மாவுமில்லில் அரைத்து வைத்துக்கொள்ளவும்
  2. இந்த மாவை சலித்து விட்டு இரண்டு டீஸ்பூன் சூடான எண்ணை உப்பு மிளகுத்தூள் ஒமம் அரிசி மாவு சேர்த்து பிசிறி சிறிது சிறிதாக நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காராசேவ் அச்சில் இட்டு பெரிய முறுக்காக பிழியவும
  4. பிழிந்த உடனே ஜல்லிக்கரண்டியால் கிளறி விடவும.
  5. வெந்த பின் கிளறினால் உடையாது .வெந்த பின் கையால் உடைத்தாலும் ஷேப் வராது
  6. .வேகுமுன் கிளறி விட்டால்தான் உடைந்து அழகான ஷேப் கிடைக்கும்
  7. முறுகலானதும் வடி தட்டில் போட்டு ஆற விட்டு டப்பாவில் அடைக்கவேண்டும்
  8. ஒரு மாதமானாலும் கெடாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்