பீர்க்கங்காய் கடைசல் | Peerkangai Kadaisal | Ridge Gourd Masiyal | Turai Sabji in Tamil

எழுதியவர் Sangeetha Priya R  |  11th Jul 2016  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Peerkangai Kadaisal | Ridge Gourd Masiyal | Turai Sabji by Sangeetha Priya R at BetterButter
பீர்க்கங்காய் கடைசல் Sangeetha Priya R
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

67

1

பீர்க்கங்காய் கடைசல் recipe

பீர்க்கங்காய் கடைசல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Peerkangai Kadaisal | Ridge Gourd Masiyal | Turai Sabji in Tamil )

 • கடுகு - 1/2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - கொஞ்சம்
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 1-2 எண்ணிக்கை அல்லது அதிகமாக
 • தக்காளி - 1 எண்ணிக்கை (நடுத்தர அளவு)
 • வெங்காயம்/சின்ன வெங்காயம் - 8 எண்ணிக்கை
 • பீர்க்கங்காய் - 1 எண்ணிக்கை (தோராயமாக 12)

பீர்க்கங்காய் கடைசல் செய்வது எப்படி | How to make Peerkangai Kadaisal | Ridge Gourd Masiyal | Turai Sabji in Tamil

 1. தோலை உரித்து சுத்தப்படுத்தி பீர்க்கங்காயைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்க. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கிய வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
 2. இப்போது நறுக்கியத் தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக்கொள்ளவும். இறுதியாக பீர்க்கங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு மூடியால் மூடவும்.
 3. மிதமானச் சூட்டில் தேவைப்படும் போது தண்ணீர் தெளித்து, வேகவைக்கவும், பிரஷர் குக்கரிலும் வேகவைக்கலாம்.
 4. மேலும் மேஷர் பயன்படுத்தி மசித்து விரைவில் சமைக்கவும்.
 5. காய்கறிகள் வெந்து மிருதுவாக சாறு நிரைந்ததாக மாறியதும் அடுப்பை நிறுத்தவும்.
 6. உருளைக்கிழங்கு மேஷரை மசிப்பதற்குப் பயன்படுத்தலாம் அல்லது பிளண்டரைப் பயன்படுத்தி மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 7. கடுகு கறிவேப்பிலை கொண்டு தாளித்து, அதன் மீது அலங்கரித்துக்கொள்ளவும்.
 8. மசியலை சாதம் அல்லது டிபின் வகையறாக்களோடு பரிமாறவும்.

எனது டிப்:

பச்சை மிளகாய், தக்காளி சேர்ப்பது இந்த மசியலுக்கு சிறப்பானச் சுவைக்கொடுக்கும் என்பதால் தவிர்க்கவேண்டாம்.

Reviews for Peerkangai Kadaisal | Ridge Gourd Masiyal | Turai Sabji in tamil (1)

Nithya Karthikeyana year ago

Reply