வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கடைசல்

Photo of Peerkangai Kadaisal | Ridge Gourd Masiyal | Turai Sabji by Sangeetha Priya R at BetterButter
2915
17
4.0(1)
0

பீர்க்கங்காய் கடைசல்

Jul-11-2016
Sangeetha Priya R
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் - 1 எண்ணிக்கை (தோராயமாக 12)
  2. வெங்காயம்/சின்ன வெங்காயம் - 8 எண்ணிக்கை
  3. தக்காளி - 1 எண்ணிக்கை (நடுத்தர அளவு)
  4. பச்சை மிளகாய் - 1-2 எண்ணிக்கை அல்லது அதிகமாக
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - கொஞ்சம்
  7. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தோலை உரித்து சுத்தப்படுத்தி பீர்க்கங்காயைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்க. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கிய வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
  2. இப்போது நறுக்கியத் தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக்கொள்ளவும். இறுதியாக பீர்க்கங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு மூடியால் மூடவும்.
  3. மிதமானச் சூட்டில் தேவைப்படும் போது தண்ணீர் தெளித்து, வேகவைக்கவும், பிரஷர் குக்கரிலும் வேகவைக்கலாம்.
  4. மேலும் மேஷர் பயன்படுத்தி மசித்து விரைவில் சமைக்கவும்.
  5. காய்கறிகள் வெந்து மிருதுவாக சாறு நிரைந்ததாக மாறியதும் அடுப்பை நிறுத்தவும்.
  6. உருளைக்கிழங்கு மேஷரை மசிப்பதற்குப் பயன்படுத்தலாம் அல்லது பிளண்டரைப் பயன்படுத்தி மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  7. கடுகு கறிவேப்பிலை கொண்டு தாளித்து, அதன் மீது அலங்கரித்துக்கொள்ளவும்.
  8. மசியலை சாதம் அல்லது டிபின் வகையறாக்களோடு பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nithya Karthikeyan
Nov-30-2018
Nithya Karthikeyan   Nov-30-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்