உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சாதம், மட்டன் குழம்பு,தாழ்சா

Photo of Coconut milk rice , Mutton curry, mutton bone dalcha by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
77
4
0(0)
0

தேங்காய் பால் சாதம், மட்டன் குழம்பு,தாழ்சா

Oct-27-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
130 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சாதம், மட்டன் குழம்பு,தாழ்சா செய்முறை பற்றி

தேங்காய் பால் சாதம் ,மட்டன் குழம்பு, மட்டன் எலும்பு தாழ்சா

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
 2. அரிசி -3 கப்
 3. தேங்காய் பால் - 4 கப்
 4. வெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கியது
 5. தக்காளி -1 பொடியாக நறுக்கியது
 6. பச்சை மிளகாய் - 3
 7. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 8. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
 9. மல்லி இலை - சிறிதளவு
 10. பட்டை -2 துண்டு
 11. ஏலக்காய் -6
 12. கிராம்பு -6
 13. பிரியாணி இலை -2
 14. நெய் -2 தேக்கரண்டி
 15. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 16. உப்பு - தேவையான அளவு
 17. மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
 18. மட்டன் - 1/2 கிலோ
 19. தயிர்-2 தேக்கரண்டி
 20. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 21. சின்ன வெங்காயம் -15-20 பொடியாக நறுக்கியது
 22. தக்காளி -2 பொடியாக நறுக்கியது
 23. பச்சை மிளகாய் -2
 24. மல்லி இலை -சிறிதளவு
 25. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
 26. மிளகாய் தூள் -1 1/2 தேக்கரண்டி
 27. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
 28. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 29. சீரகத்தூள -1/2 தேக்கரண்டி
 30. பட்டை - 1 துண்டு
 31. கிராம்பு -5
 32. ஏலக்காய் -5
 33. பிரியாணி இலை -1
 34. எண்ணைய் - 3 தேக்கரண்டி
 35. உப்பு - தேவையான அளவு
 36. அரைப்பதற்கு :
 37. தேங்காய் -3 தேக்கரண்டி
 38. முந்திரி -6
 39. தாழ்சா செய்ய தேவையான பொருட்கள் :
 40. கடலைப்பருப்பு -3/4 கப்
 41. துவரம்பருப்பு -1/4 கப்
 42. மட்டன் எலும்பு - 100 கிராம்
 43. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
 44. தக்காளி -1 பொடியாக நறுக்கியது
 45. பச்சை மிளகாய் -2
 46. மல்லி இலை -சிறிதளவு
 47. புளி -நெல்லிக்காய் அளவு
 48. கேரட் -1 சிறியது
 49. உருளைக்கிழங்கு -1
 50. அவரைக்காய் -6
 51. முருங்கைக்காய் -6 துண்டுகள்
 52. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
 53. மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
 54. சாம்பார் பொடி -2 தேக்கரண்டி
 55. எண்ணெய் -தேவையான அளவு
 56. உப்பு -தேவையான அளவு
 57. தாளிக்க தேவையான பொருட்கள் :
 58. சின்ன வெங்காயம்- 5 பொடியாக நறுக்கியது
 59. கடுகு -1 தேக்கரண்டி
 60. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
 61. கருவேப்பிலை -சிறிதளவு
 62. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

 1. முதலில் 3/4 முடி தேங்காயை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
 2. அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி நெய் , 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கி பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 3. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.
 4. பின்பு தக்காளி , பச்சை மிளகாய், மல்லி இலை ,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. இப்பொழுது 4 கப் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரிசியை கழுவி அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்,
 6. குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கவும்.சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
 7. மட்டன் குழம்பு செய்ய குக்கரை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் , கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
 8. சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 9. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பச்சை வாசம் போனதும் தக்காளி , பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
 10. இப்பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி , சீரகம், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
 11. பின்பு 2 தேக்கரண்டி தயிர்சேர்த்து வதக்கவும்.
 12. இப்பொழுது கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
 13. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 6-7 விசில் குக்கரில் வேகவிடவும்.
 14. மிக்சியில் தேங்காய் மற்றும் முந்திரியை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்..
 15. இப்பொழுது குக்கரை திறந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 விசில் வரும் வரை குக்கரில் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
 16. சுவையான மட்டன் குழம்பு தயார்.
 17. தாழ்சா செய்ய முதலில் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து 3-4 விசில் குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
 18. மட்டன் எலும்பையும் சிறிதளவு உப்பு,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து குக்கரில் 5-6 விசில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
 19. காய்கறிகளை அனைத்தையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 20. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 21. பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
 22. பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
 23. இப்பொழுது மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
 24. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.
 25. இப்பொழுது வேகவைத்துள்ள பருப்பு மற்றும் மட்டன் எலும்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 26. புளியை கரைத்து அதையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
 27. கடாயில் எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை , மல்லி இலை சேர்த்து தாளிக்கவும்.
 28. தாளிப்பை தாழ்சாவில் சேர்க்கவும். சுவையான மட்டன் எலும்பு தாழ்சா தயார்.
 29. பண்டிகை காலத்தில் செய்யக்கூடிய தேங்காய் பால் சாதம், மட்டன் குழம்பு , மட்டன் எலும்பு தாழ்சா தயார்.தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்