வீடு / சமையல் குறிப்பு / கோவா/மாவா ஜாமுன்

Photo of Kova/Mawa jamun by Juvaireya R at BetterButter
931
3
0.0(0)
0

கோவா/மாவா ஜாமுன்

Oct-27-2018
Juvaireya R
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கோவா/மாவா ஜாமுன் செய்முறை பற்றி

இந்தியாவின் பிரபலமான இனிப்பு வகைகள் ஒன்றானது ஜாமுன்.அதனை பால் கோவாவை கொண்டு செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • இந்திய
  • ஃபிரையிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 250 கிராம் மாவா/ இனிப்புஈல்லாத கோவா
  2. 4 மேஜைக்கரண்டி மைதா
  3. ஒரு கப் சர்க்கரை
  4. சிறிதளவு ஏலக்காய்த்தூள்
  5. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும்
  2. ஒரு கப் சர்க்கரை அரை கப் தண்ணீர் சேர்க்கவும்
  3. பின் அதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  4. அரை கம்பி பதத்திற்கு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்
  5. அரை கம்பிப்பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்து அதனை ஓரமாக வைக்கவும்
  6. கோவாவை/ மாவாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்
  7. பின் அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்
  8. கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
  9. ஒரு கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சூடேற்றவும்
  10. மிதமான சூட்டில் ஒவ்வொரு உருண்டைகளாக போடவும்
  11. சிறு குச்சியின் உதவியால் அதனை நன்றாக கலந்து விடவும் எனவே அனைத்து பக்கமும் சீராக வேகும்.
  12. தீயின் அளவானது மிகவும் சிறிதாக இருக்க வேண்டும்
  13. ஜாமூன்ங்கள் நன்றாக வெந்ததும் பொன் நேரத்திற்கும் மேலாக வந்ததும் அதனை எடுத்து தட்டிற்க்கு மாற்றவும்.
  14. பின் அனைத்து ஜாமுன் களையும் சர்க்கரைப் பாகில் போடவும்
  15. மூன்று மணி நேரத்திற்கு நன்றாக ஊறவிடவும்
  16. பின் ஜாமூன்களை பாகுடன் சேர்த்து பரிமாறவும்
  17. சுவையான தீபாவளி குலோப்ஜாமூன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்