வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் அல்வா

Photo of Apple Halwa by Bena Aafra at BetterButter
588
2
0.0(0)
0

ஆப்பிள் அல்வா

Oct-27-2018
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் அல்வா செய்முறை பற்றி

அல்வா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.அதிலும் பழங்கள் வைத்து செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள்-3
  2. பால்-1/4கப்
  3. சர்க்கரை -3/4கப்
  4. நெய்-5மேஜக்கரண்டி
  5. உலர்திராட்சை
  6. முந்திரிப்பருப்பு

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
  2. அவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து அரைக்கவும் .
  3. மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  4. பின் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி திராட்சை ,முந்திரியை வறுத்து வைத்து கொள்ளவும்.
  5. பிறகு வாணலியில் 2ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்த ஆப்பிள் விழுதை சேர்த்து கிளறவும்.
  6. நன்றாக ஈரப்பதம் போகும் வரை கிளறி விட்டு பாலை சேர்க்கவும் .
  7. பால் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  8. பின் சீனியை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  9. பிறகு நன்றாக அல்வா பதம் வரும் வரை கிளறி விட்டு இடைஇடையில் நெய் சேர்த்து கிளறவும்.
  10. பிறகு வறுத்த முந்திரி,திராட்சை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிண்டி விட்டு இறக்கவும்.
  11. சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
  12. ஃப்ரிஜில் வைத்தும் சில்லுன்னு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்