வீடு / சமையல் குறிப்பு / மினி பாதுஷா

Photo of Mini badhusha by Rabia Hamnah at BetterButter
441
3
0.0(0)
0

மினி பாதுஷா

Oct-27-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

மினி பாதுஷா செய்முறை பற்றி

பண்டிகைக் கால தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. மைதா - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
  3. வெண்ணெய் - 1/2 கப்
  4. பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  5. புளிப்பில்லாத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
  6. எண்ணெய் - பொரிக்க
  7. பாகு செய்ய:சர்க்கரை - 1/2 கப்
  8. தண்ணீர் - 1/2 கப்
  9. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  10. குங்குமப்பூ - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மைதா+பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும்.
  2. ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய்+தயிர்+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.
  3. மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.இந்த பதமே சரியாக இருக்கும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும்.
  4. குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.
  5. பின் சிறிய உருண்டையாக எடுத்து வடைபோல் தட்டி கட்டை விரலால் குழிபோல் செய்யவும்.
  6. பானில் எண்ணெயை காயவைக்கவும்.மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது பாதுஷாக்களைப் போடவும்.
  7. மிதமான தனலில் பொறிக்கவும்.
  8. இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது குங்குமப்பூ+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
  9. பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுத்து தனியே வைக்கவும்.
  10. சர்க்கரை பாகு காய்ந்ததும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்