உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முறுக்கு

Photo of Murukku by sudha rani at BetterButter
1
2
0(0)
0

முறுக்கு

Oct-28-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

தீபாவளி காரம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. முறுக்கு மாவு 2 கப்
  2. பட்டர் 2 ஸ்பூன்
  3. கருப்பு எள்ளு 1/4 ஸ்பூன்
  4. தேங்காய் பால் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. சூரியகாந்தி எண்ணெய் தேவையான அளவு
  7. முறுக்கு மாவு தயாரிக்க:
  8. தரமான பொன்னி அரிசி 6 கப்
  9. முழு உளுந்து 1/4 கப்
  10. கடலைப்பருப்பு 1/4 கப்
  11. பொட்டுக்கடலை 1/2 கப்
  12. ஓமம் 2 ஸ்பூன்
  13. சீரகம் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முறுக்கு மாவு தயாரித்தல்:
  2. அரிசியை 3 மணி நேரம் ஊற விட்டு பின் நன்கு உலர்த்தி வைக்கவும்
  3. உளுந்து மற்றும் கடலைப்பருப்பை சிவக்க வறுத்து பொட்டுக்கடலை மற்றும் அரிசி சீரகம் ஓமம் எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. இதை மாவு மில்லில் கொடுத்து திரித்து தேவைப்படும் போது தேவையான அளவு எடுத்து முறுக்கு சுடவும்
  5. முறுக்கு தயாரித்தல்:
  6. முறுக்கு மாவுடன் உப்பு மற்றும் எள்ளை சேர்த்து கலந்து சூடான பட்டரை ஊற்றி பிசிறி பின்தேங்காய் பால் விட்டு பிசைந்து கொள்ளவும்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் முறுக்கு அச்சில் ( தேன்குழல்) எண்ணெய் தடவி ரெடியா உள்ள மாவை பிழிந்து விடவும்
  8. எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுத்து வைக்கவும்
  9. ஒவ்வொரு ஈட்டிற்க்கும் எண்ணெய் நன்கு சூடானதும் மாவை பிழியவும்
  10. காரத்திற்கு விருப்பபட்டால் மிளகாய்த்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொள்ளலாம்
  11. ஆனால் வெறும் உப்பு தேங்காய் பால் மற்றும் சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்