வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வடை /மசால் வடை

Photo of Paruppu vadai/ masal vadai by Rabia Hamnah at BetterButter
813
1
0.0(0)
0

பருப்பு வடை /மசால் வடை

Oct-28-2018
Rabia Hamnah
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு வடை /மசால் வடை செய்முறை பற்றி

சுவையான பண்டிகைக்கான தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி பருப்பு ஒரு கப்
  2. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  3. வத்தல் 2
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  6. கறிவேப்பிலை இரண்டு கொத்து பொடியாக நறுக்கியது
  7. எண்ணை பொரிக்க
  8. மிளகாய்-2
  9. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. பட்டாணி பருப்புடன் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் பட்டாணி பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
  3. மீதமுள்ள பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு இஞ்சி, சீரகம், வத்தல் மூன்றையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
  4. அரைத்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்க்கவும்
  5. தேவைக்கு உப்பு சேர்த்து எடுத்து வைத்த 1டேபிள்ஸ்பூன் பருப்பை சேர்க்கவும்
  6. நன்றாக கைகளால் பிசைந்து வைக்கவும்
  7. பின்பு ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி வைக்கவும் இப்படி எல்லாவற்றையும் செய்து வைக்கவும்
  8. பொரிக்க தேவையான எண்ணெய் சேர்த்து காய வைக்கவும்
  9. எண்ணை நன்கு காய்ந்ததும் மிதமான தீயில் வடையை பொரித்து எடுக்கவும்
  10. அவ்வப்போது விரட்டிக் கொண்டே இருக்க வேண்டும்
  11. வடை நன்கு பொரிந்ததும் தனியே எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்