எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடி | Ellu podi (hot & sweet) Dry chutney powder in Tamil

எழுதியவர் Subashini Murali  |  11th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ellu podi (hot & sweet) Dry chutney powder by Subashini Murali at BetterButter
எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடிSubashini Murali
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

109

0

எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடி recipe

எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ellu podi (hot & sweet) Dry chutney powder in Tamil )

  • 2 துண்டு வெல்லம்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
  • உப்பு சுவைக்காக
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 10-12 சிவப்பு மிளகாய்
  • 1/2 கப் வெள்ளை உளுந்து
  • 1 கப் கருப்பு எள்ளு

எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடி செய்வது எப்படி | How to make Ellu podi (hot & sweet) Dry chutney powder in Tamil

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி எள்ளை மிதமானச் சூட்டில் வெடித்து அருமையான நறுமணம் வரும்வரை வறுக்கவும்.
  2. வெள்ளை உளுந்தைப் பொன்னிறமாகும்வரை எதுவும் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும்.
  3. மிளகாய், சீரகம், கறிவேப்பிலையைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
  4. சேர்வைப்பொருள்களை அதிகம் வறுத்துவிடவேண்டாம், அப்படிச் செய்தால் கசப்புத் தட்டிவிடும்.
  5. ஆறியதும் முதலில் மிளகாயை உப்புடன் ஒரு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  6. இப்போது அனைத்துப் பொருள்களையும் சேர்த்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  7. காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
  8. நல்லெண்ணெயோடு சுவை அதிகமாக இருக்கும்
  9. இட்லி தோசைக்கு சுவையானப் பக்க உணவு.

Reviews for Ellu podi (hot & sweet) Dry chutney powder in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.