வீடு / சமையல் குறிப்பு / எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடி

Photo of Ellu podi (hot & sweet) Dry chutney powder by Subashini Murali at BetterButter
2530
15
4.0(0)
0

எள்ளுப்பொடி (காரம் & இனிப்பு) உலர் சட்னிப்பொடி

Jul-11-2016
Subashini Murali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1 கப் கருப்பு எள்ளு
  2. 1/2 கப் வெள்ளை உளுந்து
  3. 10-12 சிவப்பு மிளகாய்
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. உப்பு சுவைக்காக
  6. 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
  7. 2 கொத்து கறிவேப்பிலை
  8. 2 துண்டு வெல்லம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி எள்ளை மிதமானச் சூட்டில் வெடித்து அருமையான நறுமணம் வரும்வரை வறுக்கவும்.
  2. வெள்ளை உளுந்தைப் பொன்னிறமாகும்வரை எதுவும் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும்.
  3. மிளகாய், சீரகம், கறிவேப்பிலையைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
  4. சேர்வைப்பொருள்களை அதிகம் வறுத்துவிடவேண்டாம், அப்படிச் செய்தால் கசப்புத் தட்டிவிடும்.
  5. ஆறியதும் முதலில் மிளகாயை உப்புடன் ஒரு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  6. இப்போது அனைத்துப் பொருள்களையும் சேர்த்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  7. காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
  8. நல்லெண்ணெயோடு சுவை அதிகமாக இருக்கும்
  9. இட்லி தோசைக்கு சுவையானப் பக்க உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்