வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biryani by sudha rani at BetterButter
528
1
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Oct-28-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

பண்டிகை என்றாலே அது அசைவ உணவு இல்லாமல் முழுமையாகது எனவே பண்டிகையை சிறப்பாக்க சுவையான மட்டன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் 3/4 கிலோ
  2. சீரக சம்பா அரிசி 2 கப்
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 2
  5. பச்சை மிளகாய் 2
  6. கறிவேப்பிலை சிறிது
  7. புதினா சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. எண்ணெய் 150 மில்லி
  10. நெய் 6 டேபிள்ஸ்பூன்
  11. கடுகு 1/2 ஸ்பூன்
  12. ஷாஜீரா 1 ஸ்பூன்
  13. இஞ்சி பூண்டு விழுது 6 டேபிள்ஸ்பூன்
  14. பிரியாணி தூள் 4 டேபிள்ஸ்பூன்
  15. கறிமசால் தூள் 1 டேபிள்ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  17. உப்பு 2 1/4 ஸ்பூன்
  18. தயிர் 2 குழிகரண்டி
  19. லெமன் 1
  20. பட்டை 2
  21. கிராம்பு 4
  22. பிரியாணி இலை 2
  23. மராத்தி மொக்கு 2
  24. தேங்காய் பால் 2 கப்
  25. தண்ணீர் 2 கப்
  26. அலங்கரிக்க:
  27. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்
  28. சர்க்கரை 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் மராத்தி மொக்கு பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும்
  2. பின் கடுகு ஷாஜீரா சேர்த்து கறிவேப்பிலை புதினா பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் மட்டன் மற்றும் தூள் வகைகள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் 20 நிமிடங்கள் கழித்து ஊறவிட்ட அரிசியை சேர்த்து தயிர் லெமன் சாறு பிழிந்து தேங்காய்ப் பால் +தண்ணீர் கலந்து 4 கப் அளந்து ஊற்றி கொதிக்க விடவும்
  6. நன்கு கொதிக்கும் போது கொத்தமல்லி தழை தூவி மீதி நெய் விட்டு கலந்து குக்கரை மூடி சிம்மில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும்
  7. அலங்கரிக்க: வெங்காயத்துடன் சர்க்கரை சேர்த்து ப்ரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்
  8. அதை பிரியாணி மேல் தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்