பக்லாவா | Baklava in Tamil

எழுதியவர் Sakshi Khanna  |  8th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Baklava by Sakshi Khanna at BetterButter
பக்லாவாSakshi Khanna
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

328

0

Video for key ingredients

 • Homemade Short Crust Pastry

பக்லாவா recipe

பக்லாவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Baklava in Tamil )

 • 1 1/2 கப் பாதாம் சீவல்கள் நறுக்கப்பட்டது
 • 1 கப் வாதுமைக்கொட்டை நறுக்கப்பட்டது
 • 1/3 கப் பொடி சர்க்கரை
 • 1/2 கப் முந்திரி பருப்பு நறுக்கப்பட்டது
 • 2 கப் கேஸ்டர் சர்க்கரை
 • 2 கப் தண்ணீர்
 • 200 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய்
 • 2 தேக்கரண்டி இலவங்கத்தூள்
 • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • ஒரு சிட்டிகை கிராம்புத் தூள்
 • 16-20 பஃப் பேஸ்ட்ரி தாள்கள்
 • பிஸ்தா பருப்பு அலங்கரிக்க

பக்லாவா செய்வது எப்படி | How to make Baklava in Tamil

 1. பாதாம், வாதுமை, முந்திரி பருப்பு, சர்க்கரை, இலவங்கத்தூள், கிராம்புத் தூள் ஆகியவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் கலந்துகொள்க.
 2. சாஸ் பாத்திரத்தைச் சூடுபடுத்தி தண்ணீர் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். சிம்மில் 10-15 நிமிடங்கள் சிரப்பு சற்றே அடர்த்தியாகும்வரை வைக்கவும்.
 3. ஒரு சமையல் பாத்திரத்தில், வெண்ணெயைத் தடவுக. 10 பேஸ்டிரி தாள்களில் வெண்ணெய் தடவி சமையல் பாத்திரத்தில் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கவும்.
 4. பூரணத்தை தாள்களில் சமமாக நிரப்பவும்.
 5. பூரணத்தை இன்னொரு 10 வெண்ணெய் தடவிய பேஸ்டிரி தாள்களால் மூடுக. மேல் பேஸ்டிரி தாளில் வெண்ணெய் தடவுக, கடைசித் தாளை வைத்தபிறகு.
 6. பேஸ்டிரி தாள்களில் கட்டமாக அல்லது டயமண்டு வடிவத்தைக் குறித்துக்கொள்க.
 7. ஓவனை 160 டிகிரி Cக்கு ப்ரீ ஹீட் செய்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேஸ்டிரி பொன்னிறமாக மாறும்வரை பேக் செய்யவும்.
 8. வெந்ததும் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து மேல் பகுதியில் சமமாக சிரப்பை மெதுவாக ஊற்றவும்.
 9. பேஸ்ட்ரி சிரப்பில் 5-6 மணி நேரங்கள் பிரிஜ்ஜில் ஊறவிடவும்.
 10. தயாரானது, தட்டில் பரிமாறவும். தேவைப்பட்டால் பிஸ்தா பருப்பு மற்றும் கூடுதலான சிரப்பால் அலங்கரிக்கவும்.

Reviews for Baklava in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.