வீடு / சமையல் குறிப்பு / கோதுமை வெல்லம் சேர்ந்த குக்கர் கேக்

Photo of jaggery wheat cake by poorani Kasiraj at BetterButter
587
1
0.0(0)
0

கோதுமை வெல்லம் சேர்ந்த குக்கர் கேக்

Oct-29-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை வெல்லம் சேர்ந்த குக்கர் கேக் செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான கோதுமையும் வெல்லமும் சேர்ந்த கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒன்றரை கப் கோதுமை மாவு
  2. ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. ஒரு கப் வெல்லம்
  5. அரைக்கப் ஆயில்
  6. அரை கப் பால்
  7. ஒரு டீஸ்பூன் உப்பு
  8. ரெண்டு ஸ்பூன் தண்ணீர்
  9. மூன்று ஏலக்காய்
  10. இரண்டு முட்டை
  11. முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் பழம் அரை கப்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை பொடித்து கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு அடி அடித்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் பால் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்
  5. பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளவும்
  6. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடேற்றவும்
  7. குக்கரில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்
  8. தோசை கல்லின் மேல் குக்கரை வைத்து சூடேற்றவும்
  9. அதனுடன் 2 முட்டையை சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  10. ஒரு நிமிடம் முழுமையாக வைத்து அடித்துக் கொள்ளவும்
  11. கோதுமை மாவுடன் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலித்து கொள்ளவும் 3 முறை சலிக்கவும்.
  12. மாவினை முட்டை கலவையில் சேர்த்து மெதுவாக கிளறவும்
  13. நன்கு கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும்
  14. முந்திரி கிஸ்மிஸ் பாதாமை சேர்க்கவும்
  15. சூடான குக்கரில் மாவினை ஊற்றவும்
  16. குக்கரை நன்கு தட்டி கொள்ளவும் ஒன்று போல் இருக்க வேண்டும் மேடு பள்ளமாக இருக்க கூடாது அதனால் சிறிது தட்டி கொள்ளவும்
  17. குக்கரை மூடி போட்டு மூடவும்
  18. rubber மட்டும் போட்டு வைத்துக் கொள்ளவும் விசில் போட கூடாது
  19. 50 நிமிடங்களுக்கு பிறகு அதனை குச்சி கொண்டு குத்தி பார்க்கவும்
  20. குச்சியில் மாவு ஓடவில்லை என்றால் கேக் ரெடியாகி விட்டது என்று அர்த்தம்
  21. குக்கர் கேக்கை திருப்பி தட்டில் வைத்து தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  22. கோதுமை வெல்லத்தால் ஆன கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்