வீடு / சமையல் குறிப்பு / வாடா

Photo of vaada by shadiqah hasana at BetterButter
0
1
0(0)
0

வாடா

Oct-29-2018
shadiqah hasana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாடா செய்முறை பற்றி

எங்க ஊரில் மாலை வேளைகளில் வீதிகளில் வாடா வாடா என்று கூவி விற்பார்கள்.புதியவர்களுக்கு வினோதமாக இருக்கும் அரிசஇயினால் செய்யப்பட்ட கிரிஸ்பியான வடை அது.பண்டிகை நேரங்களில் வடை செய்யும் பொழுது இதையும் ட்ரை பண்ணிப்பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • వేయించేవి
 • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பச்சரிசி 1 கப்
 2. தேங்காய்துருவல் 1/2 கப்
 3. நறுக்கிய வெங்காயம் 1 கப்
 4. நறுக்கிய பச்சை மிளகாய் 2
 5. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிது
 6. சோம்பு 1 டீஸ்பூன்
 7. மஞ்சள் 1 டீஸ்பூன்
 8. உப்பு சுவைக்கு
 9. நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
 10. ரீஃபைண்டுஆயில் பொரிக்கத்தேவையான அளவு

வழிமுறைகள்

 1. பசரசரிசியை பத்து நிமிடங்கள் ஊற வைத்து நிழல் உலர்த்தலாக காய விடவும்
 2. காய்ந்த அரிசியை மிக்சியில் பொடிக்கவும்
 3. 11/2 டம்ளர் தண்ணீர் அடுப்பில் வைத்து கொதிக்கும் பொழுது உப்பு மஞ்சள் சேர்த்து அரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாமல் உப்புமா பத்தத்தைவிட நல்லெண்ணையும் சேர்த்து கெட்டியாக கிளறி மூடி போட்டு ஆற விடவும்
 4. இதை முதல் நாளிரவே தயாரித்து வைத்தால் வாடா சாப்டாக இருக்கும்
 5. தேங்காய்துருவலுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைத்து இந்த கலவையுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
 6. எண்ணெயை காய வைக்கவேண்டும்.மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி ப்ளாஸ்டிக் ஷீட்னின் மீது வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் க்ரிஸ்பியாக பொரித்தெடுக்கவும்
 7. மேலே க்ரிஸ்பியாகவும் உள்ளே சாப்டாகவும் சுவையான வாடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்