வீடு / சமையல் குறிப்பு / குஸ்கா நெய் சாதம் மற்றும் (வதக்கி அரைத்த)கோழி சாப்ஸ்(சிக்கன் சாப்ஸ்)

Photo of kuskaa Rice & Chicken chops by Bena Aafra at BetterButter
475
1
0.0(0)
0

குஸ்கா நெய் சாதம் மற்றும் (வதக்கி அரைத்த)கோழி சாப்ஸ்(சிக்கன் சாப்ஸ்)

Oct-29-2018
Bena Aafra
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குஸ்கா நெய் சாதம் மற்றும் (வதக்கி அரைத்த)கோழி சாப்ஸ்(சிக்கன் சாப்ஸ்) செய்முறை பற்றி

சிக்கன் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று.அவற்றில் எனக்கு தெரிந்த முறையில் செய்த ரெசிபீ........

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குஸ்கா சாதம்::
  2. அரிசி-2கப்
  3. பச்சை மிளகாய் -1
  4. பட்டை -2
  5. ஏலம்-2
  6. புதினா
  7. கொத்தமல்லிதழை
  8. தண்ணீர் -4கப்
  9. பட்டைஏலம் பொடி-1/3டீஸபூன்
  10. உப்பு-தேவைக்கேற்ப
  11. நெய்-3ஸ்பூன்
  12. எண்ணெய்-2ஸபூன்
  13. தக்காளி-1
  14. சிக்கன் சாப்ஸ்:::
  15. சிக்கன்-1கிலோ
  16. இஞ்சி-25கிராம்
  17. பூண்டு
  18. தக்காளி -1
  19. பட்டைஏலம் பொடி
  20. மஞ்சள்தூள்
  21. பச்சை மிளகாய் -1
  22. கொத்தமல்லி
  23. புதினா
  24. உப்பு-தேவைக்கேற்ப
  25. எண்ணெய்
  26. தண்ணீர்
  27. வதக்கி அரைக்க::
  28. பட்டை-2
  29. ஏலம்-2
  30. வரமிளகாய்-4
  31. சீரகம்
  32. மிளகு
  33. தக்காளி-2
  34. வெங்காயம்-3
  35. மல்லித்தூள்-1ஸ்பூன்
  36. மிளகாய் தூள் -1ஸ்பூன்
  37. உப்பு

வழிமுறைகள்

  1. குஸ்கா சாதம்::::
  2. அரிசியை சுத்தம் செய்து ஊற வைத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் பாத்திரம் வைத்து நெய் மற்றும் ஏற்றி காய்ந்ததும் பட்டை,ஏலம் ,சீரகம் ,பச்சைமிளகாய்,சேர்த்து தாலிக்கவும்.
  4. பின் கொத்தமல்லிஇலை,புதினா,அரைத்த வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. உப்பு மற்றும் சிறிது பட்டைஏலம் பொடி சேர்த்து வதக்கவும்.
  6. நன்றாக பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
  7. பிறகு 4கப் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
  8. தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு கிண்டி விடவும்.
  9. உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
  10. நன்றாக வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து தம்மில் விடவும்.
  11. பிறகு சாப்பாட்டின் மேல் தண்ணீர் பாத்திரம் வைத்து தம்மில் விட்டு இறக்கவும்.
  12. சூடான குஸ்கா சாதம் தயார்.
  13. சிக்கன் சாப்ஸ்::::
  14. சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
  15. அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம்,மிளகு,வரமிளகாய் ,பட்டை ,ஏலம் ,நறுக்கிய வெங்காயம் ,தக்காளி, மல்லித்தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  16. உப்பு சேர்த்து கொள்ளவும்.
  17. வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
  18. இஞ்சிபூண்டினை அரைத்து கொள்ளவும்.
  19. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சைமிளகாய் கொத்தமல்லி,புதினா,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  20. உப்பு சேர்த்து வதக்கவும்.
  21. மஞ்சள் தூள் ,பட்டைஏலம் பொடி சேர்க்கவும்.
  22. நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  23. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  24. நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  25. பிறகு கோழியை சேர்த்து கிளறி விட்டு வேகவைக்கவும்.
  26. நன்றாக கொதித்து வெந்ததும் இறக்கவும்.
  27. கடைசியாக மிளகுதூள் ,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  28. சுவையான சிக்கன் சாப்ஸ் மற்றும் குஸ்கா சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்