வீடு / சமையல் குறிப்பு / பூந்தி லட்டு

Photo of Boondi laddu by sudha rani at BetterButter
549
0
0.0(0)
0

பூந்தி லட்டு

Oct-30-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பூந்தி லட்டு செய்முறை பற்றி

பண்டிகை என்றாலே எவ்வளவு புதிய இனிப்புகள் இருந்தாலும் கூட பாரம்பரியமான இனிப்புக்கு ஈடாகாது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கடலைமாவு 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. ஏலக்காய்த்தூள் 1 ஸ்பூன்
  5. பச்சை கற்பூரம் சிறிது
  6. நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை 1/4 கப்
  7. மஞ்சள் புட் கலர்
  8. நெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் ஜலித்து பின் தண்ணீர் ஊற்றி கரைத்து கலர் கலந்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூந்தி ஜர்ணியில் ஊற்றவும்
  3. மாவு கரைசலை ஊற்றி தேய்க்க கூடாது தேய்த்தால் முத்து முத்தாக பூந்தி விழுகாது ஜர்ணியில் ஊற்றி வேறு ஒரு கரண்டியால் நன்கு பலமாக தட்டினால் பூந்தி நன்கு விழும்
  4. பின் சிவக்க விடாமல் அதே சமயம் பச்சையாகவும் இல்லாமல் மெத்தென்று பூந்தியை எடுக்கவும்
  5. சிறிது எண்ணெய் வடிய விட்டு தயாராக உள்ள சுகர் சிரப்பில் ஊறவிடவும்
  6. சுகர் சிரப்:
  7. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள் பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. பூந்தி சுகர் சிரப்பை நன்கு இழுத்து கொள்ளும் வரை (சுமார் 4 மணி நேரம் )ஊற விட்டு சூடான நெய் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்
  9. பின் கைகளால் நன்றாக அழுத்தி பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்