வீடு / சமையல் குறிப்பு / மினி பீட்ஸா பைட்ஸ்

Photo of Mini pizza bites by Surya Rajan at BetterButter
270
0
0.0(0)
0

மினி பீட்ஸா பைட்ஸ்

Oct-30-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி பீட்ஸா பைட்ஸ் செய்முறை பற்றி

வித்யாசமான சுலபமான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை அல்லது மைதா மாவு ஒரு கப்
  2. ட்ரை ஈஸ்ட் ஒரு ஸ்பூன்
  3. சர்க்கரை அரை ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. நறுக்கிய குடை மிளகாய் அரை கப்
  6. நறுக்கிய வெங்காயம் அரை கப்
  7. நறுக்கிய தக்காளி அரை கப்
  8. பனீர் துண்டுகள் சிறிதளவு
  9. துருவிய சீஸ் சிறிதளவு
  10. பீட்சா சாஸ்
  11. இத்தாலியன் சீசனின் தேவையெனில்

வழிமுறைகள்

  1. வெதுவெதுப்பான தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் ட்ரை ஈஸ்ட் நன்றாக கலந்து விட்டு மூடி வைக்கவும்
  3. ஐந்து நிமிடத்தில் ஈஸ்ட் தயாராகிவிடும்
  4. பின் அதனை மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து செய்து கொள்ளவும்
  5. பின் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்
  6. மாவு நன்றாக கொதி வந்ததும் மீண்டும் அதனை ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்
  7. பின் அதனை சிறிய வட்ட வடிவ பங்குகளாக்கி வட்டவடிவமாக தட்டிக் கொள்ளவும்
  8. பின் அதன் மேல் பீட்சா சாஸ் தடவவும்
  9. பின் அதன் மேல் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய மஷ்ரூம் குடைமிளகாய் வெங்காயம் தேவையான காய்கறிகள் பனீர் துண்டுகள் சேர்க்கவும்
  10. பின் அதன் மேல் தேவையான சீசனிங் சேர்க்கவும்
  11. பின் அதன் மேல் துருவிய சீஸ் சேர்க்கவும்
  12. 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்